»   »  டிவி ஹீரோவை நம்பித் தவியாய் தவிக்கும் சங்க இயக்குநர்

டிவி ஹீரோவை நம்பித் தவியாய் தவிக்கும் சங்க இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி ஹீரோ பஞ்சாயத்து ஒரு வழியாக முடிக்கப்பட்டுவிட்டது. பசுமை தயாரிப்பாளருக்கும் நழுவும் தயாரிப்பாளருக்கும் ஆளுக்கொரு படம் பண்ணித் தருவதாக ஒப்புக்கொண்டு விட்டார் ஹீரோ. ஆனால் இதில் சங்கம் படம் எடுத்த இயக்குநருக்கு தான் சிக்கல் தொடங்கியுள்ளது.

TV hero's director in trouble

சங்கம், சூப்பர்ஸ்டார் ரசிகன் என்று இரண்டு படங்களை இதே ஹீரோவை வைத்து இயக்கியுள்ளார் இயக்குநர். இரண்டு படங்களிலுமே பெரிய சம்பளம் வாங்கவில்லை. மூன்றாவது படம் சொந்த தயாரிப்பு. எனவே அதிக சம்பளம் தருகிறேன் என்று உட்கார வைத்திருந்தார் ஹீரோ. இப்போது பிரச்னை பண்ணிய இரண்டு தயாரிப்பாளர்கள் படங்களில்தான் அடுத்தடுத்து நடிக்க வேண்டும். எனவே இயக்குநரின் படம் அவர்கள் கைகளுக்கு போகவே வாய்ப்பு அதிகம்.

ஹீரோவுக்கே அடிமாட்டு சம்பளம் பேசிய அவர்கள் இயக்குநருக்கு எப்படி கொடுப்பார்கள் என்பது தெரியாதா? எனவே கரும்பு மெஷினில் கையை கொடுத்தது போல் தவிக்கிறாராம் இயக்குநர்.

English summary
TV hero’s next movie director is in big trouble due to his salary is yet to be fixed.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil