»   »  ஒரு காமெடியின் காதல் கதை!

ஒரு காமெடியின் காதல் கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் காமெடிப் புயல் வடிவேலுவையும், கலக்கல் புயல் கோவை சரளாவையும் இணைத்து மீண்டும் படு ஸ்டிராங்காக செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.

சினிமாவில் நீண்ட நாளாக ஸ்டெடியான மார்க்கெட்டுடன் கலக்கி வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய நடிகைகளில் கோவை சரளாவும் ஒருவர். கிட்டத்தட்ட மனோரமாவுக்குப் பிறகு காமெடியில் கலகலக்க வைத்த நடிகை கோவை சரளா மட்டுமே.

முதலில் எஸ்.எஸ்.சந்திரனுடன் வெளுத்துக் கட்டினார். பிறகு கவுண்டமணியுடன் கலாய்த்தார். பின்னர் அவரது சைடு செந்திலுடன் சிலம்பினார். பிறகு சார்லி என அனைத்து காமெடி நடிகர்களுடனும் இணைந்து கலக்கியவர் சரளா.

ஆனால் வைகைப் புயல் வடிவேலுவுடன் ஜோடி போட ஆரம்பித்த பிறகுதான் கோவை சரளாவின் முழு வீச்சும் வெளிப்பட்டது. இப்படியும் கூட ஒரு நடிகையால் கலக்க முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வெளுத்துக் கட்டினார் கோவை சரளா.

வடிவேலுவுடன் சரளா இணைந்து நடிக்க ஆரம்பித்த பிறகு அவர்களை இணைத்து சரமாரியாக வதந்திகள் கிளம்பின. இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள், நெருங்கிப் பழகுகிறார்கள், காதல் மலர்ந்து பூத்துக் குலுங்குகிறது என்று செய்திகள் கிளம்பின.

ஆனால் இந்த வதந்திகளை இருவருமே மறுக்கவில்லை. பின்னர் இருவருக்கும் லடாய் என்று செய்தி வந்தது. அதற்கேற்ப இருவரும் சமீப காலமாக இணைந்து நடிக்கவில்லை.

மேலும் தமிழில் கோவை சரளா படங்களைக் குறைத்துக் கொண்டு விட்டார். ஆனால் தெலுஙகில் படு பிசியாக உள்ளார். நிறையப் படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலேயே செட்டிலாகி விட்ட சரளா எப்போதாவதுதான் சென்னைக்கு வருகிறார். இந்த நிலையில் கோவை சரளாவையும், வடிவேலுவையும் இணைத்து புதிய வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

வடிவேலு அடிக்கடி ஹைதராபாத் போகிறார், சரளாவை சந்திக்கிறார். இருவரும் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் தங்குகின்றனர், ஒட்டிக்கிட்டு ஊர் சுற்றுகிறார்கள் என்று அந்த செய்திகள் கூறுகின்றன.

இந்த வதந்திகளையும் இருவரும் மறுக்கவில்லை. மாறாக கோவை சரளாவிடம் தெலுங்கு பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது மர்மப் புன்னகையை மட்டும் சிந்தி வைத்தாராம்.

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil