»   »  திரிஷாவை ஒதுக்கும் விஜய்?

திரிஷாவை ஒதுக்கும் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையதளபதி விஜய், திரிஷாவை ஓரம் கட்ட ஆரம்பித்துள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது. தரணி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து திரிஷாவைத் தூக்கி விடுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கில்லி படத்தில் விஜய்யும், திரிஷாவும் இணைந்து நடித்ததால் அந்தப் படம் பெரும் ஹிட் ஆனது. அதிலும் விஜய்யும், திரிஷாவும் இணைந்து ஆடிப் பாடிய அப்படிப் போடு பாட்டு பட்டி தொட்டியெங்கும் பட்டையக் கிளப்பியது.

இதையடுத்து விஜய்யின் பேவரிட் பட்டியலில் திரிஷா இடம் பெற்றார். இருவரும் நல்ல முறையில் பழகி வந்தனர். இருவருக்கும் இடையிலான நட்பு கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில்தான் போக்கிரி படம் மூலம் சிக்கல் வந்தது. இப்படத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொள்ள திரிஷாவுக்கு அழைப்பு அனுப்பவில்லை விஜய். இதனால் திரிஷா அப்செட் ஆகி விட்டார். தனது அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அழுதுள்ளார்.

இதை அறிந்த விஜய், திரிஷாவை போனில் கூப்பிட்டுப் பேசி ஆறுதல் கூறியுள்ளார். மேலும், திரிஷாவையும், அவரது அம்மாவையும் கூப்பிட்டு தனியாக பார்ட்டி கொடுத்து கூல் படுத்தினார்.

இந்த நிலையில் தரணி இயக்கத்தில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிப்பில் அடுத்து நடிக்கவுள்ள படத்திலிருந்து திரிஷாவை தூக்கி விடுமாறு விஜய், தரணியிடம் கூறியிருப்பதாக ஒரு புதிய செய்தி கிளம்பியுள்ளது.

இதுகுறித்து உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல்:

திரிஷாவை நீக்கி விட்டு ஆசினை அந்த இடத்தில் போடுமாறு தரணியிடம் விஜய் கூறியுள்ளாராம். உடனடியாக ஆசினைத் தொடர்பு கொண்டு இந்த வேலைகளைச் செய்யுமாறும் அவர் தரணியைக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

ஆனால் தரணிக்கு இதில் உடன்பாடு இல்லையாம். திரிஷாதான் எனது படத்தின் நாயகி. அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறி வருகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil