»   »  கஜேந்திரா: விஜய்காந்த்துக்கு ரூ. 3.75 கோடி

கஜேந்திரா: விஜய்காந்த்துக்கு ரூ. 3.75 கோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கஜேந்திரா படத்தை நடிகர் விஜயகாந்த் எந்த நேரத்தில் ஒப்புக் கொண்டாரோ, சிக்கல் சிக்கல் மேல் தொடர்ந்தபடிஇருக்கிறது.

முதலில் பாமக நிறுவனர் ராமதாசும், அவரது தொண்டர்களும் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று தகராறுசெய்தார்கள். மெல்ல மெல்ல அந்த விவகாரம் அடங்கிய நிலையில், வேறொரு ரூபத்தில் பிரச்சினைகிளம்பியுள்ளது.

கஜேந்திரா படத்திற்காக தயாரிப்பாளர் துரை கிட்டத்தட்ட ரூ. 7.75 கோடி செலவு செய்திருக்கிறாராம். அதில்பாதித்தொகை விஜயகாந்துக்கு சம்பளமாகவே தரப்பட்டுள்ளது. அதாவது விஜய்காந்துக்கு தரப்பட்டுள்ள சம்பளம்ரூ.3.75 கோடி.

இதில் ரூ.2 கோடியை ரொக்கமாகவும், ரூ.1 கோடியை ஒரு ஏரியாவின் வினியோக உரிமையாகவும்வாங்கியிருக்கிறார் விஜயகாந்த். அது மட்டுமல்லாமல், இந்தப் படத்தின் ஒரிஜினல் தெலுங்கு படக் கதையைவாங்குவதற்கு தான் செலவிட்ட ரூ.75 லட்சத்தையும் துரை தலையில் கட்டிவிட்டாராம் விஜயகாந்த்.

இதை எல்லாம் பொறுத்துக் கொண்டார் துரை. இப்போது பாமகவினர் எதிர்ப்பால் வட மாவட்டங்களில் படத்தைவாங்க வினியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. உங்களால்தான் இத்தனை பிரச்சினையும், எனவே வடமாவட்டங்களில் படத்தை நீங்களே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று விஜயகாந்திடம் துரை பேசியிருக்கிறார்.

இதற்கு விஜயகாந்த் ஒத்துக் கொள்ளாததால் இருவருக்கும் பிரச்சனை வந்துவிட, டப்பிங்குக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டார் விஜய்காந்த். போட்ட பணம் அம்பேலாகக் கூடிய கவலையில் துரை இருக்க, விஜயகாந்த்தோ தனதுஅடுத்த பட வேலைகளில் இறங்கி விட்டார்.

நிறைஞ்ச மனசுக்காரன் என்ற பெயரில் விஜய்காந்த் எடுக்கப் போகும் இந்தப் படத்தை அண்ணாமலை டிவிசீரியல் புகழ் டைரக்டர் சமுத்திரக்கனி இயக்குகிறார். படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க நவ்யா நாயரைகேட்டுள்ளார்கள்.

அவரது கால்ஷீட் கிடைத்ததும், வரும் 20ம் தேதி பூஜை போடத் திட்டமாம்.

இதை இப்படியே விட்டுவிட்டால், நமது முதலுக்கு மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த துரை, நீதிமன்றத்தை நாடமுடிவு செய்திருக்கிறாராம். இதனையடுத்து இப்போது அவருடன் விஜயகாந்த் சமாதானம் பேச வந்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil