»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரண்ட்ஸ் படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் விஜய்லட்சுமி.

பெங்களூரைச் சேர்ந்த விஜயலட்சுமி பல கன்னடப் படங்களில் நடித்தவர். பிரண்ட்ஸ் படத்தைத் தயாரித்த நடிகைசரிதா இவரை தமிழுக்கு அழைத்து வந்தார். அப்போது கன்னடத்தில் படு பிஸியாக இருந்த விஜயலட்சுமி,தமிழுக்குக்காக கன்னட படங்களை உதறிவிட்டு வந்தார்.

பிறப்பால் தமிழச்சி என்பதால் கோடம்பாக்கம் தன்னைக் கைவிடாது என்று நம்பினார். ஆனால், விஜய்லட்சுமிக்குதமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. குறிப்பாக இளம் நடிகர்கள் ஒதுக்கிவிட்டனர். இவருக்கு அப்பா வயதானசத்யராஜுடன் மிலிட்டரி படத்தில் ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சித்தப்பா வயதான பார்த்திபனுடன் சூரி படத்தில் ஜோடி சேர்க்கப்பட்டார். அதில் சில்க் ஸ்மிதாலெவலுக்கு கவர்ச்சி டான்சிலும் இறக்கிவிடப்பட்டார். தொடர்ந்து தமிழில் கை ஊன்றிவிடலாம் என்றநம்பிக்கையில் கிடைத்த ரோலையெல்லாம் செய்தார், ஆனால் தொடர்ந்து எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் கன்னடத்திற்குப் போனால் அங்கும் வாய்ப்பில்லை. காவிரி விவகாரத்தின்போது தமிழகத்துக்குஆதரவாக குரல் கொடுத்ததால் கன்னட சினிமாவில் இவரது இடம் காலியானது.

வெறுப்பில் இருந்த விஜயலட்சுமிக்கு சன் தொலைக்காட்சியின் கன்னட மொழி டிவியான உதயா டிவிதான்வாழ்க்கை கொடுத்துள்ளது. உதயா டிவியில் ஒளிபரப்பாகும் சாவித்திரி என்ற மெகாத் தொடரில் விஜயலட்சுமிநாயகியாக நடிக்கிறார்.

அப்படியே இவரை தமிழ் டிவிக்கும் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. சுவலட்சுமி, தேவயானி, ரோஜா,ரஞ்சிதா வரிசையில் விஜயலட்சுமி, தொடர்களில் தொடர்வாரா அல்லது வெள்ளித் திரைக்கு மீண்டும் வருவாராஎன்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

அதே போல டிவியால் தூண்டில் போடப்பட்டுள்ள மீனாவும் ரம்பாவும் இதுவரை வளைந்து கொடுக்கவில்லை.மீனா கன்னட சினிமாவில் அட்ரஸ் இல்லாத ஹீரோக்களுடன் மரங்களை சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறார். ரம்பாவோகோவிந்தாவின் உதவியுடன் இந்தியில் சின்னச் சின்ன வேடங்களில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். இவர்களைடிவிக்குக் கொண்டு வர சில தமிழ் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் விடாமல் முயன்று கொண்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil