»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

விக்ரமின் சம்பளம் ஒரு கோடியைத் தொட்டு விட்டதாம். ஒரு கோடிக்கு கிட்டக்க இருந்த விக்ரமின் சம்பளத்தை கோடியாகமாற்றிய பெருமை ஏவி.எம்.சரவணனுக்குத்தான் சேர வேண்டும். ஜெமினி படத்திற்கு அவருக்கு ஒரு கோடியை அள்ளித் தந்ததாம்ஏவி.எம். நிறுவனம்.

இப்போது சீயான் வீட்டில் தினமும் கோடிகளை நிரப்பிக் கொண்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், கதை நல்லா இருந்தா தான் பணத்தைத் தொடுகிறாராம் விக்ரம். இல்லாவிட்டால் எவ்வளவுதந்தாலும் குட் பை சொல்லி விடுகிறாராம்.

பார்த்திபன், சீதா மீண்டும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் இது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகமட்டும்தானாம். சீதாவின் விஷயத்தில் பார்த்திபனும், பார்த்திபன் விஷயத்தில் சீதாவும் தலையிடக் கூடாது என்று ஒப்பந்தம்போட்டுக் கொண்டுதான் இப்படி சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனராம்.

த்ரீ ரோஸஸ் வெளிவருகிற பாடாய் தெரியவில்லை. இதனால் நல்ல முகூர்த்தமாகப் பார்த்து கழுத்தை யாராவது தொழிலதிபருக்குநீட்டிவிட முடிவு செய்துவிட்டாராம் ரம்பா.

பாபா படத்தில் கமல்ஹாசனை சின்னக் காட்சியில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் ரஜினி.

விஜயகாந்த் தனது பெயரை விஜய் காந்த் என்று மாற்றியுள்ளார். எல்லாம் நியூமரலாஜி செய்யும் வேலைதானாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil