»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விந்தியாவும் களம் இறங்கி விட்டார். மும்தாஜ் ஸ்டைலுக்கு வந்துவிட்டார்.

நீ வரும் பாதையெல்லாம் என்ற படத்தில் விந்தியா ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். ஆட்டம் என்றால் சும்மாஆட்டம் இல்லையாம், திகிடு கிடான ஆட்டமாம்.

மும்தாஜைவிட ஒரு லெவல் கீழே இறங்கி புகுந்து விளையாண்டுள்ளாராம். அவருடன் ஆடக்கொடுத்து வைத்தபாக்கியசாலி ஆகாஷ் (விஜயக்குமாரின் மருமகன்தான்).

உடல் பெருத்துப் போனதால் ஆட முடியாமல் மும்தாஜ் முடங்கிக் கிடக்கிறார். அவரது இடத்தைப் பிடிக்கும்முயற்சியில் வேறு நடிகைகள் ஈடுபட்டிருந்தாலும் அதை விந்தியா பிடித்துவிடுவார் என்கிறார்கள்.

நீ வரும் பாதையெல்லாம் படம் வெளியே வந்தால் அடுத்த மும்தாஜாக விந்தியா உருவெடுப்பாராம்.

வீட்டிலிருந்து பிரிந்து வந்து தனது மேனேஜருடன் தான் தனிக் குடித்தனம் நடத்தி வருகிறார் விந்தியா. இருவரும்கணவன்-மனைவி போலத் தான் ஒரே வீடடில் வசிக்கின்றனர்.

இனி ஹீரோயின் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் மும்தாஜ் லெவல் கவர்ச்சிக்கு விந்தியாஇறங்கிவிட்டார். இதற்காக உடலையும் கொஞ்சம் ஊத விட்டுள்ளார்.

ன் மன வானில் படத்தில் சின்ன ரோலில் நடித்த தீபிகா இப்போது தீபு ஆக பெயரை மாற்றிக் கொண்டுவிட்டார்.அன்பு படத்தில் இவர் தான் ஹீரோயின்.

னது கால்ஷீட்களை லைலா அவரே பார்த்துக் கொள்ள தொடங்கியுள்ளார். இதற்கு முன் அதைப் பார்த்துக்கொண்டிருந்த மேனேஜர் ரொம்பவும் குழப்பம் செய்து விட்டதால் இந்த மாற்றமாம். அவரால் தான் படவாய்ப்புகளை இழந்து மும்பைக்கு போக நேர்ந்ததாக சொல்கிறார் பாலாவுக்காக திரும்பி வந்த லைலா.

த்ரீ ரோஸஸ் படத்தில் (படம் வருமா?) லைலாவின் நைனா வேடத்தில் டைரக்டர் மனோ பாலா நடிக்கிறார்.

றிமுகப்படுத்திய ராஜ்கிரண் மிகவும் வேண்டிக் கொண்டதால், செட்டிநாடு ஹவுஸ் படத்தில் அவருக்குஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் மீனா.

படத்தின் பெயர் தமிழகத்தின் முக்கியமான செட்டிநாட்டுத்தொழிலபதிபர் ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாம். ஏ.வி.எம். சரவணன் மூலமாக படத்தின் தயாரிப்பாளரைஅணுகி பெயரை மாற்ற வைத்துவிட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil