»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

வாரத்துக்கு ஒரு விந்தியா நியூஸ் எப்படியாவது கிடைத்துவிடுகிறது. ஒசூர் கற்பழிப்பு கலவர விவகாரத்துக்குப் பின்சூட்டிங்குகளை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு சில நாட்கள் வீட்டில் அமைதியாக இருந்து வந்த விந்தியாஇப்போது மீண்டும் சகஜ நிலைக்கு வந்துவிட்டார்.

மீண்டும் தான் நடிக்கும்சேட்டை, கன்னி நிலா உள்ளிட்ட பட சூட்டிங்குகளில் டண்டனக்கா கவர்ச்சி காட்டிக்கொண்டிருக்கிறார்.

வயசுப் பசங்களில் ஆரம்பித்த விந்தியாவின் கவர்ச்சி சேட்டை படத்தில் உச்சத்தை எட்டிக் கொண்டுள்ளது.

அந்தஸ்டில்களால் ஈர்க்கப்பட்டுவிட்ட கேரளா சினிமாவாலாக்கள் இப்போது விந்தியாவை மலையாள படவுலகுக்குக்கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வரும் வாய்ப்புக்களை உடனே கப் என பிடித்துக் கொள்ளும் விந்தியா, அட்வான்ஸை எல்லாம் வாங்கிவிட்டுத்தான், படத்தில் எனக்கு என்ன ரோல் என்றே கேட்கிறாராம்.

என்ன கேரக்டர் என்றாலும் நடிக்க ரெடி என்றுசொல்லிவிடும் விந்தியா, மலையாளத்தில் அவ்வளவாக பணம் தர மாட்டார்கள் என்பதால் ரேட்டையும் முடிந்தஅளவுக்குக் குறைத்துக் கொள்கிறாராம்.

இதற்கிடையே தமிழில் இன்னொரு படத்திலும் செகண்ட் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் விந்தியா.

ஆந்திராவில் செம ஓட்டம் ஓடிய பிரேம சரித்ரம் என்ற படம் தான் தமிழில் காதல் காவியம் என்ற பெயரில்தயாராகிறது.

இதில் ஹீரோயின் தனுராய்- ஹீரோ சத்யா என்ற புதுமுகம். அவர்களுடன் இன்னொரு ஜோடியாக நடிக்கப்போவது விந்தியாவும் லிவிங்ஸ்டனும். இதில் தனுராய்க்கும் விந்தியாவுக்கு கடும் கவர்ச்சிப் போட்டியேவைத்திருக்கிறார் டைரக்டர். இருவரும் வெளுத்து வாங்கி வருகிறார்களாம்.

இதில் விந்தியாவை தூக்கி சாப்பிடுவார் தனுராய் என்கிறார்கள். தொடர்பான செய்திகள் இன்று என்ற ஒரு படத்திலும்நடித்திருக்கிறார் தனு.

அதே போல சேட்டை படத்திலும் விந்தியாவுக்கும் லேகாஸ்ரீக்கும், சுஷ்மா என்ற புதுமுகத்துக்கும் இடையேகவர்ச்சிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சுஷ்மா தான் மற்ற இருவரையும் கலங்கடிக்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil