»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து தகராறு செய்து வரும் விவேக், இப்போது இயக்குநர் ஹரியுடனும் லடாய்விட்டுள்ளார்.

அஜீத், விஜய், மாதவன் என முன்னணி ஹீரோக்களுடன் காமடியில் கலக்கி வந்த விவேக், பின்னர் அவர்களைநையாண்டி செய்து நடிக்க ஆரம்பித்ததால், அஜீத், விஜய்யுடன் படம் கட் ஆனது. விஜய்யாவது திருமலையில்சமாதானம் ஆகி விவேக்குடன் சமரசம் ஆனார். ஆனால் அஜீத் சுத்தமாக ஒதுக்கி விட்டார்.

இதனால் ஷாம் போன்ற குட்டி ஹீரோக்களுடனும், வயதான ஹீரோக்களுடனும் நடிக்க ஆரம்பித்தார் விவேக்.அதுவும் பின்னர் நின்று போனது.

இந் நிலையில்தான் சாமி படம் அவருக்கு பெரிய பிரேக்கைக் கொடுத்தது. அதிலும் கூட இந்துக்களை ரொம்பவேநையாண்டி செய்திருந்தார் விவேக். ஆனாலும் கூட காமடி கிளிக் ஆகியது.

விவேக்கின் மார்க்கெட் சுமாராக ஆரம்பித்த நிலையில் வடிவேலு உள்ளே புகுந்து மார்க்கெட்டை டண்டணக்காஆக்கி விட்டார். இப்போது ஹரி டைரக்ட் செய்யும் அருள் படத்தில் நடித்து வருகிறார் விவேக். இங்குதான்தகராறு ஆரம்பமாகியது.

தனது காமடி டிராக்கை தானே எழுதிக் கொள்வதாக விவேக் கூற அதை சரியென்று கூறியுள்ளார் ஹரி. ஆனால்படத்தின் கதைக்குப் பாதிப்பு வராமல் காமடி டிராக்கை அமைக்குமாறு ஹரி கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்தவிவேக், சாமி படமே எனது காமடியால்தான் ஓடியது, திருமலையும் என்னால்தான் தப்பியது என்ற ரீதியில் பேசகடுப்பாகி விட்டார் ஹரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil