»   »  ஓ... இவங்க முட்டல் மோதலுக்கு இதான் காரணமா?

ஓ... இவங்க முட்டல் மோதலுக்கு இதான் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்தில் என்ன வேணா செஞ்சிட்டுப் போங்க... எனக்கென்ன வந்தது என்கிற ரீதியில் அந்த முக்கிய நடிகர் இருப்பதில், சக நடிகர்கள் பலருக்கும் ஏக வருத்தம்.

ஒருமுறை கூட இந்தப் பக்கம் வந்த தலையைக் காட்ட மாட்டேங்குறாரே... அப்படி என்ன பிரச்சினை இவருக்கு? அப்படின்னா சங்கத்தைவிட்டு விலகத் தயாரா என இன்னொரு கோஷ்டி குரலுயர்த்துகிறது.

Why key actor clashed with Nadigar Sangam head?

ஏற்கெனவே இருந்த நாட்டாமை கோஷ்டிக்கு எதிராக முஷ்டி உயர்த்திய நடிகருக்கும் இவருக்கும் ஆகாதாம். இப்போது பார்த்து நடிகர் சங்கம் புதிதாக வீறு கொண்டெழுந்து ஏகப்பட்ட விஷயங்களைச் செய்து வருகிறது. இதையெல்லாம் பார்த்து கடுப்பாகித்தான் அவர் இப்படி பிடிவாதம் காட்டுவதாக சங்கத்தின் சில அங்கத்தினர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

'எல்லாம் ஈகோதாங்க' என்பது இவர்கள் கருத்து.

ஆனால் நடிகரின் ஆதரவாளர்களோ... 'அவரெல்லாம் இதைப் பற்றிக் கவலைப்படும் ஆளே கிடையாது. யார் மீதும் அவருக்கு பொறாமையும் கிடையாது. அவருக்கென்று ஒரு கொள்கை வைத்திருக்கிறார். அதன்படி நடக்கிறார். அவர் மீதுள்ள கடுப்பில் கண்டபடி செய்தி பரப்புகிறார்கள்', என்று முட்டுக் கொடுக்கிறார்கள்.

சங்கம்னு வந்தா எப்பவும் கோஷ்டிகள் இருக்கத்தானே செய்யும்!

English summary
Why that head actor not attending Nadigar Sangam events or meetings? Here is the reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil