ஃபிளைட் நடிகரின் படம் திட்டமிட்டப்படி வெளிவருமா? அந்தக்காட்சியால் சிக்கல் தான்..தப்பிக்க வழி என்ன

By Staff

தமிழ் திரையுலகில் உச்சமாக விளங்கும் அந்த ஃபிளைட் நடிகர் படம் விமர்சிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

குறிப்பிட்ட அந்த காட்சிக்காக அவரது படம் சென்சாரில் சிக்கி வெளிவருவதில் பிரச்சினை ஏற்படும் என்கின்றனர்.

இதை தவிர்க்க சில வழிமுறைகளை அந்த படக்குழு எடுத்தால் மட்டுமே சிக்கல் தீரும் இல்லாவிட்டால் பொங்கலுக்கு படம் வருவது சிக்கல் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அப்பாவால் வாழ்வு பெற்ற நடிகர்

அப்பாவால் வாழ்வு பெற்ற நடிகர்

தமிழ் திரை உலகில் அப்பாக்களால் வாழ்வு பெற்ற நடிகர்கள் பலர் இருக்க இவர் முக்கியமானவர். பலர் வாழ்வு பெற்றாலும் இவர் உச்சத்தில் உயர்ந்த நடிகர் என்று சொல்லலாம். இந்த நடிகர் இன்று தமிழ் திரை உலகின் உச்சகட்டம். சில ஆண்டுகள் வரை சாதாரணமாக நடித்து வந்த இவர் திடீரென தெலுங்கில் பிரபலமாக இருந்த ஒல்லிபாபு நடிகரின் பாணியை கையில் எடுத்தார். அசால்டாக அசால்ட் செய்த இவரது நடிப்பை தமிழ் திரை உலகில் பலர் ரசித்தனர். இந்த நிலையில் உச்சபட்ச நட்சத்திரமான அவர் தொட்டதெல்லாம் துலங்கியது.

வசூலில் உச்சம் பெற்ற நடிகர்

வசூலில் உச்சம் பெற்ற நடிகர்

வசூலில், படங்களில் இவர் வெற்றிகரமாக இருந்ததால் மிகப் பிரபலமானார். இதனால் சம்பளமும் உயர்ந்தது, தயாரிப்பாளர்களும் இவர் வீட்டு வாசலில் தவம் கிடந்தனர். இவர் தேர்வு செய்வது தான் கதை என்ற நிலைக்கு உயர்ந்தவர், காமெடி படம் எடுத்த இயக்குனரை வைத்து சீரியஸாக படம் எடுத்து சீரியஸ், காமெடி ஆகி போய் உலக அளவில் அந்த படத்தின் காட்சிகள் விமர்சிக்கப்பட்டது. இதனால் அடுத்த படத்தை சிறப்பாக செய்யும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்.

தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திய நபர்

தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திய நபர்

அதனால் அவர் திடீரென இவர் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்த, இவர் படத்தை இயக்க முன் வந்தார் பிரபல தெலுங்கு இயக்குனர். அந்த இயக்குனர் எடுத்த பாடங்களில் நடித்த அந்த ஒல்லிபாபு நடிகரின் பாடி லாங்குவேஜைத்தான் இவர் பின்பற்றித்தான் அவர் நடித்து வந்தார் என திரையுலகில் பேச்சு. அதனால் இவர் நடிக்கும் அந்த படம் தெலுங்கில் வெளியானால் எங்கே அந்த நடிகரின் மார்க்கெட் பாதிக்கப்படுமோ மற்றவர்களின் மார்க்கெட் பாதிக்கப்படுமோ என்று பயந்தது தெலுங்கு திரை உலகம் சில தடைகளை கொண்டுவரும் அளவுக்கு அவரது ப்டம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு தாங்களே சூன்யம் வைத்துக்கொண்ட படக்குழு

தங்களுக்கு தாங்களே சூன்யம் வைத்துக்கொண்ட படக்குழு

ஆனால் வெளியில் பிரச்சினை அல்ல வெளியிலிருந்து தடையை தாண்டி தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொண்டனர் அந்த படத்தின் படக்குழுவினர். படத்தில் சென்சார் சிக்கல் இல்லாமல் எடுக்க வேண்டிய சில காட்சிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் இவர்கள் காட்சிகளை எடுத்ததால் அது பெரிய பிரச்சனையாகி தமிழகத்தின் சினிமாவை ஆளுகின்ற முக்கிய நபர் வரை பஞ்சாயத்து போக நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் அனுப்பி வைக்க, ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் ஒதுங்க இப்போது பிரச்சினையில் சிக்கி நிற்கிறது படக்குழு.

டெல்லியிலிருந்து ஓலை..சென்சாரில் தப்புமா?

டெல்லியிலிருந்து ஓலை..சென்சாரில் தப்புமா?

டெல்லியில் இருந்து ஓலை வந்துள்ள நிலையில் படத்தை முடித்து சென்சாருக்கு அனுப்பி வெளியே வருமா? என்கிற நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. அந்த காட்சிகளை வைத்து சென்சார் டீம் திருப்பி அனுப்பினால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் பட குழு மண்டை பிய்த்துக் கொண்டு இருக்கிறது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த காட்சி ஒரு பாடல் காட்சி என்கிறார்கள். அப்படியானால் அந்த பாடல் காட்சியை நீக்க வேண்டும் அல்லது புதிதாக சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சினைகள் சிக்காத அளவில் மீண்டும் அந்த காட்சிகளை எடுத்து சென்சாருக்கு அனுப்ப வேண்டும் என்பதே அந்த படக் குழுவினர் முன்னால் உள்ள பிரச்சனை. இது தீர்த்து படக்குழு சரியான பாதையில் பயணிக்குமா? பொங்களுக்குள் படத்தைக் கொண்டு வருமா? என்ற பதைபதைப்பில் ரசிகர்களும், விநியோகஸ்தர்களும், படக்குழுவினரும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X