100 கோடி பில்டப்.. தயாரிப்பாளர்களை தொடர்ந்து டார்ச்சர் செய்யும் இளம் நடிகர்.. இதுவேறையா?
சென்னை: இளம் நடிகர் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருவது உண்மை என்றாலும், 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் எல்லாம் வெறும் வெத்து பில்டப் ஏமாற்று வேலை தான் என பிரபலம் ஒருவர் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை கோலிவுட்டில் கிளப்பியுள்ளது.
இளம் நடிகர் மட்டுமின்றி இதற்கு முன்பாக பல நூறு கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றி என கம்பி சுற்றிய முன்னணி நடிகர்களும் அதே பித்தலாட்ட வேலையை தான் பார்த்துள்ளனர் என்றும் அந்த இடத்திற்கு தற்போது இந்த இளம் நடிகரும் இணைந்து விட்டார் என்று பகீர் கிளப்புகின்றனர்.

சரியாக படங்கள் ஓடாத போது நடிகர்கள் கதைகளை பாருங்க, கருத்துக்களை பாருங்க என கம்பு சுத்துவதும், படங்கள் சிறப்பாக ஓடிவிட்டால், 100 கோடி கிளப் என வடை சுடுவதும் தான் சினிமா உலகையே கெடுத்து வருகிறது என அந்த பிரபலம் புலம்பித் தள்ளியுள்ளார்.
முன்னாடியே பில்டப்: சமீபத்தில் இளம் நடிகர் நடித்த திரைப்படம் 100 கோடி வசூலை இன்னமும் கடக்கவில்லை என்றும் ஆனால், அதற்கு முன்னாடியே மற்ற நடிகர்களுடனான போட்டியை உருவாக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனத்தை டார்ச்சர் செய்தே இப்படியொரு பில்டப் ப்ரோமோஷன் வேலைகளை அந்த நடிகர் பார்த்துள்ளார் என்றும் எப்படியும் 2வது வாரத்தில் அந்த இலக்கை நடிகர் அடைந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்து இப்படி தங்களது படத்தையும் ஹீரோவையும் ப்ரோமோட் செய்ய போலியான வசூல் கணக்கை அறிவித்து வருவதாக கூறியுள்ளார் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு ரொம்பவே நெருக்கமான பிரபலம் ஒருவர்.
இவர் மட்டுமல்ல: இந்த டகால்டி வேலையை இவர் மட்டும் பண்ணவில்லை என்றும் டாப் நடிகர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் பலரும் இதே வெத்து பில்டப்பில் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர் என்றும் அப்போதுதான் மக்கள் ஏமாந்துப் போய் அவர்களின் மார்க்கெட்டை மேலும், உயர்த்துவார்கள் என்கிற பிசினஸ் ட்ரிக்ஸ் தான் இந்த அறிவிப்பு எல்லாம் என்று கூறியுள்ளார். ஆனால், இப்படி அளந்து விட்டால், அதற்கு சரியான கணக்கை அரசுக்கு செலுத்த வேண்டுமே என்கிற கேள்வியும் எழுந்த நிலையில், அந்த கணக்கை எல்லாம் ஆடிட்டர் கச்சிதமாக பார்த்துக் கொள்வார் என்றும் அந்த பிரபலம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











