For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பலத்த அடி.. இயக்குநரிடம் கறார் காட்ட ஆரம்பித்த இளம் மாஸ் ஹீரோ.. தேவையில்லாமல் முட்டிக்கிச்சாம்!

  By Staff
  |

  சென்னை: அந்த இயக்குநரிடம் ஜாலியாக இருந்ததால் தான் இப்படியொரு சரிவை சந்தித்துவிட்டீர்கள் என கூட இருந்த சில அல்லக்கைகள் ஏற்றிவிட, அடுத்த பட இயக்குநரிடம் தேவையில்லாமல் கோபித்துக் கொண்டாராம் இளம் மாஸ் ஹீரோ.

  சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறையிலும் வெற்றித் தோல்வி என்பது பகல் இரவு போல மாறி மாறித்தான் வரும்.

  சரியாக திட்டமிட்டு ஒவ்வொன்றாக பார்த்து செய்ய ஆரம்பித்த நேரத்தில் இப்படி ஆகிடுச்சே என்கிற கடுப்பில் நடிகர் இருந்தது தான் இந்த மோதலுக்கு காரணம் என்கின்றனர்.

  ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் தான் நடிப்பேன் என இயக்குநரிடம் சொன்னேன்..குஷ்பு சொன்ன சுவாரஸ்ய தகவல்ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் தான் நடிப்பேன் என இயக்குநரிடம் சொன்னேன்..குஷ்பு சொன்ன சுவாரஸ்ய தகவல்

  பலத்த அடி

  பலத்த அடி

  படத்தை முழுதாய் பார்த்த போதே சொதப்பி இருக்கே என்பதை தெளிவாக இளம் மாஸ் ஹீரோ புரிந்து கொண்டார். எப்படியாவது பில்டப் கொடுத்து சேல் பண்ணி விட வேண்டும் என பக்காவாக பிளான் பண்ணி தொடர்ந்து சில விசயங்களை நடிகர் செய்தாலும், கடைசியில் தியேட்டருக்கு வந்த நிலையில், இதைத்தான் இத்தனை நாளா ஒட்டிக்கிட்டு இருந்தீயா என ரசிகர்கள் எட்டி உதைத்து விட்டனர்.

  செம கடுப்பு

  செம கடுப்பு

  படத்தின் ரிசல்ட்டை முன்னாடியே அறிந்து வைத்த நாயகன் அந்த இயக்குநர் மீது பயங்கர கடுப்பில் இருந்து வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஜால்ரா தட்டும் சில நலம் விரும்பிகள், நீங்க ரொம்ப ஜாலியாக இயக்குநர்களிடம் பேசிட்டு இருந்தா உங்க மாஸ் என்னன்னு அவங்களுக்கு புரியாது. ஸ்க்ரிப்ட் பேப்பரை முழுவதுமா வாங்கி பாருங்க, உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்களுக்கு செட் ஆகுற மாதிரி கதையை மாத்த சொல்லுங்க என கொம்பு சீவ, அதை தற்போது நடித்து வரும் இயக்குநரிடம் காட்டி இருக்கிறார் அந்த வளரும் நடிகர்.

  எல்லாம் எனக்குத் தெரியும்

  எல்லாம் எனக்குத் தெரியும்

  தனது கதையில் செம ஸ்ட்ராங்காக இருக்கும் இயக்குநரிடம் இந்த படத்தில் வாங்கிய பலத்த அடியை மனதில் வைத்துக் கொண்டு கறாராக பேசிய நிலையில், ஸ்க்ரிப்டில் கையை வைக்கிற வேலையே வச்சிக்கக் கூடாது என நடிகரை முறைத்தே விட்டாராம் அந்த இயக்குநர்.

  முட்டிக்கிச்சு

  முட்டிக்கிச்சு

  படத்தின் ஹீரோ என்கிட்டேயே எப்படி பேசலாம். நான் வரலைன்னா அவரு யார வச்சி படம் எடுப்பாருன்னு பார்க்கலாம் என்கிற அளவுக்கு இளம் மாஸ் நடிகரும் எகிறி விட்டாராம். உடனடியாக இயக்குநரையும் நடிகரையும் உதவியாளர்கள் தனித்தனியே அழைத்து பேசி, நடிகர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதை இயக்குநரிடம் புரிய வைத்துள்ளனர். இயக்குநர் தரப்பில் இருந்தும் நடிகரிடம் சமாதான தூது சென்ற நிலையில், பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

  ஹிட் கொடுக்கணும்

  ஹிட் கொடுக்கணும்

  இந்த வாட்டி ஏதோ மிஸ் ஆகிடுச்சு, அடுத்த முறை ஹிட் கொடுத்தே ஆகவேண்டும், அதை மனதில் வைத்துக் கொண்டு இயக்குநரை வேலையை பார்க்க சொல்லுங்க என்றும் சமாதான தூது வந்தவர்களிடம் நடிகர் கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாராம். பிரச்சனை முடிந்ததாக பார்க்கப்பட்டாலும், இன்னமும் நடிகரும் இயக்குநரும் சகஜமாக பேசிக் கொள்வது இல்லையாம். உதவி இயக்குநர்கள் மட்டும் தான் நடிகர் பக்கம் வந்து பேசி செல்வதாக கூறுகின்றனர்.

  English summary
  Young actor interfere with director's content part makes unwanted clash between them. Actor upsets over his recent movie collapsed due to Director's mistake and receives a backlash at theaters.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X