அப்படியொரு அட்ஜெஸ்ட்மென்ட்.. வரிசையா அந்த நடிகை பல படங்களில் கமிட்டாக அதுதான் காரணமாம்!

By Staff

சென்னை: இளம் நடிகை ஒருவர் அடுத்தடுத்து பல படங்களில் அதிரடியாக கமிட் ஆகி நடித்து வருவதற்கு பின்னணியில் உள்ள காரணம் குறித்த ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யமான நடிகை பார்க்க அழகாக மட்டுமின்றி நடிப்பிலும் அசத்தி வருகிறார். தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் அடுத்தடுத்து அவர் புக் செய்யப்பட்டு நடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் 6,7 படங்களை ரிலீஸ் செய்துள்ளார்.

சக நடிகைகள் அனைவரும் இவருக்கு எப்படி திடீரென இப்படி வாய்ப்பு மழை குவிந்து வருகிறது என்கிற பொறாமையோடு கூடிய க்யூரியாஸிட்டியே கிளம்பி உள்ளது என்றும் கூறுகின்றனர்.

திடீரென குவியும் படங்கள்

திடீரென குவியும் படங்கள்

ஐஸ்வர்யமான நடிகைக்கு திடீரென பல படங்கள் குவிந்து வருகின்றன. இது ஒட்டுமொத்த திரைத்துறையையும் வியப்பில் ஆழ்த்தியது மட்டுமின்றி எப்படி என்கிற கேள்வியையும் பலமாக கிளப்பி உள்ளது. பார்க்கவும் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் அசத்தி எடுப்பதால் நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும், மற்ற நடிகைகளுக்கு அமையாத வாய்ப்பு இவருக்கு மட்டும் எப்படி சாத்தியம் ஆனது என்பது தான் அனைவர் மண்டையிலும் புகுந்துள்ள பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.

இசையின் சொந்தம்

இசையின் சொந்தம்

பிரபல இசையமைப்பாளரின் சொந்தக்காரியான அந்த நடிகை அவர் மூலமாகத் தான் படித்த படிப்பை விட்டு விட்டு சினிமாவில் நடிக்க வந்து விட்டார் என்றும் பேசிக் கொள்கின்றனர். ஒரு மொழியில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் இந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவது பல முன்னணி நடிகைகளையே பொறாமையில் ஆழ்த்தி உள்ளதாம்.

சின்னது பெரிசு

சின்னது பெரிசு

சின்ன படங்கள், பெரிய படங்கள் என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மாறி மாறி நடித்து வருகிறார் அந்த இளம் நடிகை. திடீரென நடிகைக்கு இப்படி முக்கியமான படங்கள் குவிந்து வருவதற்கு பின்னணியில் என்ன காரணம் ஒளிந்திருக்கு என்கிற ஆராய்ச்சியில் சிலர் அதிதீவிரமாகவே இறங்கி உள்ளனர்.

அந்த அட்ஜெஸ்ட்மென்ட்

அந்த அட்ஜெஸ்ட்மென்ட்

அந்த இளம் நடிகையை பல இயக்குநர்களும் அணுக காரணம் அவர் சம்பள விஷயத்தில் செய்து கொள்ளும் அந்த அட்ஜெஸ்ட்மென்ட் தான் என்கின்றனர். கோடிகளில் எல்லாம் சம்பளம் வாங்காமல் பெரிய படங்களில் நடித்ததன் பின்னரும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் சில லட்சங்களிலேயே சம்பளம் வாங்கி வருவதால் தான் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அந்த நடிகையை உடனடியாக புக் செய்து தங்கள் படங்களில் நடிக்க வைத்து வருகின்றனர் என்கின்றனர்.

முக ராசி

முக ராசி

மேலும், அந்த நடிகை நடித்த படங்கள் எல்லாமே மினிமம் கியாரண்டி வெற்றி முதல் பெரிய வெற்றி வரை அடைந்து வரும் நிலையில், அவரது முகராசி ஒன்றே போதும் படம் வெற்றிக்கு என்றும் நினைக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் பரிந்துரை செய்த உடனே ஓகே செய்து அம்மணிக்கு முதல் அட்வான்ஸை கொடுத்து வருகிறார்களாம்.

டபுள் பேட்டா

டபுள் பேட்டா

சூட்டிங்கில் நேரம் அதிகம் ஆனாலும், கொஞ்சம் கூட முகம் சுளிக்காமலும், டபுள் பேட்டா எல்லாம் கேட்காமலும் அந்த நடிகை நடந்து கொள்வது தான் அவருடைய சக்சஸுக்கான சீக்ரெட் என்றும் ஒரு படத்தில் நடித்த உடனே சில நடிகைகள் பெரிய ஆட்டம் போட்டு வருவது தான் அவர்களுக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X