ஓடிடிக்கு போயும் ஒர்க்கவுட் ஆகலையே.. கதறி அழும் இளம் நடிகை.. எல்லாருமே சமத்து பேபி ஆகிட முடியுமா?

By Staff

சென்னை: திரைப்படங்கள் தான் பெரிய அளவில் கைகொடுக்கவில்லையே என்கிற அப்செட்டில் வெப்தொடரில் நடித்தாவது சமத்து பேபி மாதிரி ஷைன் ஆகிவிடலாம் என நினைத்த அந்த இளம் நடிகைக்கு அங்கேயும் பெரிய ஃபிளாப் போர்டு கழுத்தில் மாட்டி அனுப்ப கதறி அழுது விட்டாராம்.

அதிர்ஷ்டத்தை பெயரில் வைத்துக் கொண்டால் வெற்றி கொடி எப்போதுமே தன் பக்கம் பறக்கும் என நினைத்த அந்த நடிகைக்கு தொடர்ந்து படங்கள் சொதப்பின.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கலாம் என்கிற கனவும் தொடர் தோல்விகளால் சுக்குநூறாக உடைந்து போனது.

குல்பி மாதிரி

குல்பி மாதிரி

பார்க்க அப்படியே குல்பி ஐஸ் மாதிரி செம பப்ளியாக இருப்பார் அந்த இளம் நடிகை. ஆரம்பத்தில் சில படங்கள் க்ளிக்கான நிலையில், சீக்கிரமே டாப் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த அவருக்கு சரியான கதைகளை தேர்வு செய்யாமல் விட்டதால் ராசியில்லாத நடிகை என்கிற பட்டத்தை பெற்று விட்டார்.

தொடர் ஃபிளாப்

தொடர் ஃபிளாப்

கிடைக்கிற வாய்ப்புகளை விட்டு விடக் கூடாது என நல்ல கதைகளை தேர்வு செய்யாமல் இஷ்டத்துக்கு நடித்து தள்ளிய அவருக்கு தொடர்ந்து வரிசையாக சில படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், ஃபீல்ட் அவுட் ஆகி விட்டார். அவர் செலக்ட் செய்து நடித்த ஹீரோக்களுக்கே மார்க்கெட் இல்லாத நிலையில், அவரது படங்கள் எப்படி ஓடும் என்பதை புரிந்து கொள்ளாததே அவருக்கு சினிமாவில் மார்க்கெட் கிடுகிடுவென சரிய காரணம் என்கின்றனர்.

கைகொடுக்காத கவர்ச்சி

கைகொடுக்காத கவர்ச்சி

நடிகைகளுக்கு படங்கள் ஓடவில்லை என்றதுமே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி போடும் ஃபார்முலாவை இந்த நடிகையும் கையில் எடுத்து அதகளப்படுத்தினார். அதன் வாய்ப்பாக பாலிவுட்டில் வெப் தொடரில் நடிக்கும் சூப்பரான வாய்ப்பு கை மேல் பலனாக கிடைத்தது.

சமத்து பேபி

சமத்து பேபி

பாலிவுட்டில் வெப் தொடரில் அதுவும் அந்த பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே, நாமும் அடுத்த சமத்து பேபியாக மாறி அசத்தப் போகிறோம் என ரொம்பவே ஹேப்பி ஆகி படப்பிடிப்புகளுக்கெல்லாம் தவறாமல் நேரத்திற்கு வந்து கலந்து கொண்டு நல்லாவே நடித்துக் கொடுத்தார்.

அதுவும் ஒர்க்கவுட் ஆகல

அதுவும் ஒர்க்கவுட் ஆகல

ஹாலிவுட் ரீமேக் கதையை கொண்டு உருவான அந்த வெப் தொடர் இங்கே உள்ள ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகவில்லையாம். மேலும், பிரபலமான அந்த தொடரை நெட்டிசன்கள் ஏற்கனவே ஓடிடியில் பார்த்ததும் இந்த வெப்தொடரை ஒருவருமே சீண்டவில்லையாம். மேலும், அந்த தொடர் விறுவிறுப்பாக இல்லாததும் பாலிவுட் பிரபலங்கள் யாருமே வெப்தொடரை புகழ்ந்து ட்வீட் போடாததும் ரசிகர்கள் மத்தியில் அந்த வெப்தொடர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதும் நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.

கதறி அழுத நடிகை

கதறி அழுத நடிகை

அந்த வெப்தொடர் ஹிட்டாகும் அதை வைத்து பாலிவுட்டில் பல புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த நிலையில், ஏற்கனவே கிடைக்கவிருந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் நடிகைக்கு இப்போ கை நழுவி போனதால் தனது தோழிகளிடம் புலம்பி கதறி அழுதுள்ளாராம். மேனேஜர்களை வைத்து கதையை கேட்காமல் பொறுமையாக தானே கதையை கேட்டு நடித்தால் சீக்கிரமே சக்சஸ் கிடைக்கும் என தோழிகளும் அறிவுறுத்தியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X