கருமம்.. 4 பெண்களை ஏமாற்றிய டான்ஸ் மாஸ்டர்.. அவர் தான் வேண்டும் என அடம்பிடிக்கும் இளம் நடிகை?
சென்னை: ஒரு பெண் கூட காதலிக்கவோ, திருமணம் செய்யவோ கிடைக்காமல் ஏகப்பட்ட ஆண்கள் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து பெண்களுடன் இன்ஸ்டாகிராமில் இன்பமாக இருந்துக் கொண்டிருக்கும் அந்த பிரபல டான்ஸ் மாஸ்டரை எப்படித்தான் இன்னொரு பெண்ணும் விடாமல் துரத்துகிறாரோ தெரியவில்லை என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
பக்கத்து ஸ்டேட்டில் ஏகபோகமாக வளர்ச்சி அடைந்துள்ள அந்த டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்கள் குவிந்த பின்னர் கூட அவர் தான் தனது படத்தில் கவர்ச்சி குத்தாட்டத்துக்கு ஸ்டெப்ஸ் போட்டுக் கொடுக்க வேண்டும் என அந்த இளம் நடிகை ரொம்பவே அடம்பிடித்துக் கொண்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பையன் சரியில்லைன்னா அவனை பக்கத்துலே சேர்க்காதே என சொல்பவர்கள் மத்தியில் நடிகையின் இந்த பிடிவாதம் அந்த நடன இயக்குநருக்கு மேலும், அட்வாண்டேஜாக மாறிவிட்டதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
பணத்திமிர்: ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு படத்தில் ஒரு டான்ஸ் பண்ண வாய்ப்புக் கிடைக்குமா என அல்லாடிக் கொண்டிருந்த டான்ஸ் மாஸ்டர் இப்போ ஆளே மாறிப்போய் பணத்திமிர் காரணமாக அடுத்தடுத்து இளம் பெண்களையும் சக நடனக் கலைஞர்களையும் தாண்டி இளம் நடிகைகள் மீது வரை கை வைக்கும் அளவுக்கு படுமோசமானவராக வக்கிரம் பிடித்த ஆளாக மாறிவிட்டார் என்கின்றனர். எல்லாத்துக்கும் காரணம் தற்போது அவரிடம் இருக்கும் அதிகளவிலான பணம் தான் என்றும் அதை பார்த்து மயங்கியே இளம் பெண்கள் ஈசியாக அவரது வலையில் விழுந்து விடுவதாக திடுக்கிடும் உண்மைகளை கசியவிட்டு வருகின்றனர்.
வாய்ப்பும் வாழ்க்கையும் தரேன்: ஒவ்வொரு பெண்ணும் ஏற்கனவே அந்த டான்ஸ் மாஸ்டர் திருமணம் ஆகி மனைவியை கைவிட்டவர் என தெரிந்த பின்னரும் அவரை மலைபோல் நம்பி அவரது வலையில் சிக்க காரணமே வாய்ப்பும் வாழ்க்கையும் தருகிறேன் என மாடலிங் பெண்களையும் நடனக் கலைஞர்களையும் வளைத்துப் போடுவது தான் காரணம் என்கின்றனர்.
5வது ரெடி: ஏற்கனவே 4 பெண்களை ஏமாற்றி ஏகப்பட்ட மோசமான காரியங்களை செய்த அந்த டான்ஸ் மாஸ்டரை நம்பி தற்போது 5வதாக ஒரு இளம் நடிகை ஏமாற துடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் பாலியல் வழக்கில் சிக்கிய அந்த நடன இயக்குநர் தான் தனது படத்துக்கு டான்ஸ் பண்ண வேண்டும் என அடம்பிடித்தது மட்டுமின்றி அடிக்கடி கேரவனுக்கும் அழைத்து ரகசியமாக டான்ஸ் மாஸ்டருடன் ரிஹர்சல் செய்து வருவதால் கூடிய சீக்கிரமே சிக்கலில் சிக்கி விடுவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











