கிலோ கணக்கில் தங்கம் வாங்கி சேர்த்து வைக்கும் பப்ளி நடிகை.. எதிர்காலத்துல அதுதான் உதவுமாம்!
சென்னை: லேட்டஸ்ட் பப்ளி குயினாக வலம் வரும் அந்த இளம் நடிகை இப்போவே எதிர்காலத்தை பற்றி எல்லாம் ரொம்பவே சிந்திக்க ஆரம்பித்து விட்டாராம். பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் ஆரம்பத்தில் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு விலை உயர்ந்த கார்கள், பங்களா வீடு என வாங்கி அடுக்குவார்கள்.
ஆனால், இந்த இளம் பப்ளி நடிகை கார்கள் மற்றும் காஸ்ட்லியான உடைகளுக்கு செலவு செய்வதை விட தங்கத்தில் அதிகம் முதலீடு செய்து வருகிறாராம். அதன் காரணமாக இப்பவே கிலோ கணக்கில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார் என ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.

சினிமா பிரபலங்கள் அதிகமாக நிலம் வாங்குவதில் தான் முதலீடு செய்வது வழக்கம். ஒரு சதுர அடி நிலம் ஏறும் விலையை விட ஒரு கிராம் விலை அதிகமாக ஜெட் வேகத்தில் ஏறி வரும் நிலையில், இப்போதைக்கு இதில் முதலீடு செய்தால் தான் கடைசி காலத்தில் காசுக்கு கஷ்டப் படத் தேவையில்லை என்பது தான் நடிகையின் ஒரே குறிக்கோள் என்கின்றனர்.
பரிசு பொருட்கள் மீது ஆசை: பிரைவேட் பார்ட்டிகளுக்கு அடிக்கடி சென்று வரும் அந்த பப்ளி நடிகைக்கு இலவசமாக வழங்கப்படும் பரிசு பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருப்பதாக கூறுகின்றனர். தேவையற்ற பரிசுப் பொருட்களை வழங்குவதற்கு பதிலாக தங்கத்தில் செயின், மோதிரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை தருமாறு ஆர்டர் போட்டு வருகிறாராம்.
தங்கத்தில் முதலீடு: எப்படியோ இன்னும் சில வருடங்களில் இப்போதைக்கு இருப்பதை விட பல மடங்கு தங்கத்தின் விலை அதிகரித்து விடும் என பல பொருளாதார நிபுணர்கள் ஆத்து ஆத்து என ஆத்தி வருவதை எல்லாம் ஆராய்ந்து பார்த்த நடிகை சம்பாதிக்கும் போதே எதிர்காலத்துக்கும் நம்முடைய சந்ததிக்கும் எந்தவித பணக் கஷ்டமும் இல்லாத அளவுக்கு சேர்த்து வைத்து விட வேண்டும் என தங்கத்தில் அதிக முதலீடுகளை செய்து வருகிறார் என்கின்றனர்.
80 சதவீத சம்பளத்தை: அது எந்தளவுக்கு என்றால் தான் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தில், 20 சதவீதம் பணம் மட்டுமே இப்போது வாழ்வதற்கு போதுமானதாக உள்ளது என்றும் மீதமுள்ள 80 சதவீத பணத்தை அப்படியே தங்கம் வாங்குவதில் செலவு செய்து வருகிறார் என்கின்றனர். குடும்பத்தினர் நிலம் உள்ளிட்ட மற்ற சொத்துக்களை வாங்குவதில் கவனம் செலுத்த சொன்னாலும் நடிகைக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை என்கின்றனர். ரெய்டு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்காமல் இருந்தால் சரி.


Click it and Unblock the Notifications