தயாரிப்பாளர் பர்ஸை காலி பண்ணும் கிரிஞ்சு நடிகை.. அப்படியொரு பந்தாவாம்.. பில்டப்பாம்!

By Staff

சென்னை: டிவி ஷோவில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர் அந்த நடிகை.

ஜோக் சொல்றேன்னு மொக்கைப் போட்டு வரும் அவரை கிரிஞ்சு நடிகை என்றும் கிரிஞ்சு மேக்ஸ் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர்களின் பர்சை மனசாட்சியே இல்லாமல் அவர் காலி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

காமெடி பீஸ்

காமெடி பீஸ்

காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள அந்த சின்னத்திரை பிரபலத்துக்கு ஏகப்பட்ட படங்கள் கைவசம் புக் ஆகி வருகின்றனவாம். சோஷியல் மீடியாவில் அவருக்கு இருக்கும் ஃபாலோயர்கள் பல முன்னணி ஹீரோயின்களுக்கே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அதன் காரணமாகத்தான் அவரது ஆட்டமும் ரொம்பவே அதிகமாக உள்ளது என்கின்றனர்.

ஓவர் பில்டப்

ஓவர் பில்டப்

இன்னும் நடிகையாகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல பேரை எடுக்காத அந்த பிரபலம் அதற்குள் ஓவர் பில்டப் கொடுத்து வருகிறாராம். அவர் செய்யும் அராஜகத்தால் சில தயாரிப்பாளர்கள் ரொம்பவே டென்ஷன் ஆகி உள்ளதாக பேச்சுக்கள் தற்போது கோடம்பாக்கத்தில் தீயாக பரவி வருகிறது.

தயாரிப்பாளர் பர்ஸ் காலி

தயாரிப்பாளர் பர்ஸ் காலி

வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்த நடிகையைத் தான் தற்போது சில தயாரிப்பாளர்கள் அணுகி அனுப்பி வைத்து வருகின்றனர். முன்பெல்லாம் ஒன் பிளச் ஒன் டிக்கெட்டில் சென்று வந்த அந்த நடிகை தற்போது 1 பிளஸ் 5 டிக்கெட் மற்றும் ரூம் வாடகை, சாப்பாடு என ஒரு கூட்டத்தையே கூட்டிச் செல்வேன் என அடம்பிடிக்கிறாராம்.

கடுப்பில் தயாரிப்பாளர்கள்

கடுப்பில் தயாரிப்பாளர்கள்

கிரிஞ்சு நடிகையின் திடீர் அட்ராசிட்டியை பொறுத்துக் கொள்ளாமல் சில தயாரிப்பாளர்கள் அவருக்கு பதிலாக வேறு இளம் பிரபலங்களை கூட புக் செய்து அனுப்பி விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில தயாரிப்பாளர்கள் ரெக்வஸ்ட்டாக அந்த நடிகையிடம் கேட்டுக் கொண்டாலும், அதெல்லாம் முடியாதுங்க, நான் சொல்றத கேட்டா வரேன் இல்லைன்னா வேற ஆள பார்த்துக்கோங்க என ராங்கு காட்டி வருகிறாராம்.

இப்படியே போனா

இப்படியே போனா

இப்படியே போனா அவரது நிலைமை சீக்கிரமே ரொம்ப கஷ்டமாகி விடும் என நடிகையை எச்சரிக்கும் பேச்சுக்களையும் சில நெருங்கிய நண்பர்கள் அட்வைஸ் செய்தாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது இஷ்டத்துக்கு நடந்து வருகிறாராம் அந்த நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X