படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டியா.. துரத்தி விட்டும் விடாது வந்து சோலியை முடிச்சிட்டாரே.. புலம்பல்!

By Staff

சென்னை: ஒல்லி நடிகர் அந்த இயக்குநரின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்று சொன்ன நிலையிலும், விடாப்பிடியாக நீங்க தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என்றும் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று ஓவர் பில்டப் செய்தார். ஆனால், கடைசியில் ஹீரோவுக்கு அந்த படத்தால் மிகப்பெரிய சிக்கல் கோலிவுட்டில் வந்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கசிந்துள்ளன.

டிரெஸ் அணியாமல் ஒரு ஹீரோயின் நடித்த நிலையில், அந்த நடிகையை ஒட்டுமொத்தமாகவே திரையுலகம் ஓரங்கட்டி துரத்தி அடித்து விட்டது. அந்த படத்துக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், சென்டிமென்ட் அதிகம் பார்க்கும் பல தயாரிப்பாளர்கள் அந்த ஆபாச நடிகையா வேண்டாம் என சொல்லி ஃபீல்டு அவுட் செய்துவிட்டனர்.

Young Hero got tensed over Director who spoiled his Market

இந்நிலையில், அதே போன்ற ஒரு சிக்கலில் ஒல்லி நடிகர் வசமாக சிக்கிக் கொண்டார் என்றும் சமீபத்தில், அந்த பிரச்னை காரணமாக இயக்குநருக்கும் அவருக்கும் வாக்கு வாதமே ஏற்பட்டதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

வேண்டவே வேண்டாம்: ஆரம்பத்திலேயே டைரக்டர் சொன்ன கதையை கேட்டதும் நான் நல்லா இருக்கிறது போதாதா? என்றும் இப்போதுதான் வளர்ந்து வருகிறேன், அதற்குள் என்னை காலி செய்ய என்ன அவசரம் எனக் கேட்டு வேண்டவே வேண்டாம் என சொல்லி அனுப்பிவிட்டாராம். ஆனால், பல பெரிய ஆட்களின் உதவியுடன் தொடர்ந்து நடிகருக்கு டார்ச்சர் கொடுத்து போராடி நடிகரை வம்படியாக இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம் அந்த இயக்குநர். அவர் நினைத்த மாதிரியே படத்தை எடுத்திருந்தால் மேலும், பல சிக்கல்களில் சிக்கிவிடுவோம் என தனது டீமை வைத்து சில மாற்றங்களை செய்து முடிந்த வரை தனக்கு பிரச்னை வராத வண்ணம் படத்தை நடிகர் முடித்துக் கொடுத்தாராம்.

பெண்கள் ஆதரவு காலி: நடிகரின் படம் ஜாலியாக இருக்கும் என நினைத்து குழந்தைகளையும் வயதுக்கு வந்த பெண்களையும் கூட்டிக்கொண்டு படத்தை பார்த்த பலருக்கும் பாதியிலேயே எழுந்து வந்துவிடலாம் என்கிற அளவுக்கு டென்ஷன் ஆகிவிட்டதாம். இதுக்கு மேல இவன் படத்தை எல்லாம் குழந்தைகளையும் வீட்டில் உள்ள பெண்களையும் அழைத்து வந்து பார்க்கவே கூடாது என்கிற முடிவுக்கு பல தாய்மார்கள் வந்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பகீர் தகவல்கள் கிளம்பி உள்ளன.

தயாரிப்பாளர்கள் அதிருப்தி: ஒரு படம் முடிந்தவுடனே அடுத்தடுத்து நடிகரை சுற்றி தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி வருவார்கள். ஆனால், இந்த முறை அந்த நடிகரை அப்படி யாரும் வட்டமிடவில்லையாம். கோடம்பாக்கத்தில் பலரும் நடிகர் மீதும் அந்த இயக்குநர் மீதும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். முந்தையை படத்தை போலவே அந்த மியூசிக் பிரபலத்திடம் பிரச்சனையை உருவாக்கியுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனமும் அப்செட் ஆகியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இதனால், நடிகரின் அடுத்த படத்திற்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுமா? அல்லது அடுத்த படத்தின் மூலம் ரசிகர்களை அவர் சரிகட்டுவாரா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X