»   »  யுவன் டைவர்ஸ் ஏன்?- பரபரப்புத் தகவல்கள்!

யுவன் டைவர்ஸ் ஏன்?- பரபரப்புத் தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது மனைவி சுஜயா சந்திரனும் விவாகரத்து கோரி கோர்ட் படியேறியிருப்பதற்கு பரபரப்பு காரணங்கள் கூறப்படுகிறது.

இசைஞானியின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. இவரும், லண்டனைச் சேர்ந்த சுஜயா சந்திரனும் காதலித்தனர். வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் லண்டனிலேயே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இளையராஜாவின் சம்மதத்தைப் பெற்று முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் யுவனும், அவரது மனைவியும் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு வந்துள்ளனர். திரையுலகையும், இளையராஜா குடும்பத்தையும் இது கலங்கடித்துள்ளது. குறிப்பாக ராஜாவின் ரசிகர்களையும், யுவனின் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவர்களின் விவாகரத்து முடிவுக்கு பின்னணியில் பல திடுக்கிடும் காரணங்கள் மறைந்துள்ளன. இவற்றை நம்பக் கூட முடியாத அளவுக்கு படு பரபரப்பாக உள்ளன.

யுவன் தரப்புக்கு நெருக்கமான இடத்திலிருந்து நமக்குக் கிடைத்த தகவல்கள் இவை.

2003ம் ஆண்டு தனது குடும்பத்தின் சம்மதம் இல்லாமல் சுஜயாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார் யுவன். பின்னர் குடும்பத்தினரை சமாதானப்படுத்திய யுவன், அவர்கள் சம்மதத்துடன் முறைப்படி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

தங்களது சம்மதம் இல்லாமல் யுவன் கட்டிக் கொண்ட பெண் என்பதால் ராஜாவின் வீட்டிலும் அவருக்கு சரியான வரவேற்பு இல்லை எனத் தெரிகிறது. இதனால் வருத்தமடைந்த சுஜயா, யுவனிடம் இதைக் கூறியுள்ளார். ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

ஆனால் பிரச்சினை முற்றவே, மனைவியுடன் ஆழ்வார்ப்பேட்டையில் புதிய வீடு கட்டி அங்கு இடம் பெயர்ந்தார். கடந்த ஒரு வருடமாக ஆழ்வார்ப்பேட்டையில் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார் யுவன்.

புது வீட்டுக்கு வந்தவுடனேயே அவர்களுக்குள் பிரச்சினை தொடங்கி விட்டதாம். கடந்த ஒரு வருடத்தில், கடந்த 10 மாதங்களாக அவரும், மனைவி சுஜயாவும் பேச்சுவார்த்தையின்றி தனித் தனி அறையில் வசித்து வருகின்றனராம்.

யுவனுக்கும், சுஜயாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது. யுவனும், சிம்புவும் நல்ல நண்பர்கள். அதிலும் மன்மதன் படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள்.

சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளர் போல மாறி விட்டார் யுவன். இந்த நிலையில் பாடல் கம்போசிங் என்ற பெயரில் தாய்லாந்துக்கு அடிக்கடி இருவரும் பறந்துள்ளனர்.

பாங்காங், பட்டாயா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற அவர்கள் அங்குள்ள பல்வேறு உல்லாச பொழுதுபோக்கிடங்களுக்குச் செல்வது வழக்கமாம். இதுதவிர சில உல்லாச தீவுகளுக்கும் சென்றுள்ளனர். அப்போது யுவனுக்கு சில சேரக்கூடாத பழக்கங்கள் வந்து சேர்ந்து கொண்டதாம்.

இதுவும் யுவன், சுஜயா இடையே பிரச்சினை ஏற்பட ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுஜயா மீது யுவனின் நண்பர்கள் வேறு மாதிரியான குற்றச்சாட்டை எடுத்து வீசுகிறார்கள். சுஜயா அனைவரிடமும் இயல்பாக பழகக் கூடியவர். அவருக்கு ஆண் நண்பர்கள் நிறைய உண்டாம். ஆனால் இதை யுவன் விரும்பவில்லையாம்.

இப்படி சின்னச் சின்ன பிரச்சினைகள் பெரிதாகிக் கொண்டு செல்லவே பேசாமல் விவாகரத்து செய்து விடலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்களாம்.

விவாகரத்து கொடுக்க வேண்டுமானால் பெரும் தொகை தர வேண்டும், அப்போதுதான் கையெழுத்திடுவேன் என சுஜயா கோரியுள்ளார். அதை உடனடியாக யுவன் ஏற்றுக் கொண்டாராம். இதுதவிர நுங்கம்பாக்கத்தில் உள்ள 3 படுக்கை அறை கொண்ட வீட்டையும் சுஜயா பெயருக்கு மாற்றி விட்டாராம் யுவன். இதுதவிர பெரும் தொகையும் சுஜயாவுக்குக் கொடுக்கப்படவுள்ளதாம்.

நம்ப முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil