Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூப்பர் ஸ்டார் ரஜினி முழுமையாக குணமடைந்ததும் ராணா படத்தை எடுத்தால் என்ன?

ராணா வருவது எப்போது என்ற செய்திகள் எங்கு பார்த்தாலும் அலை பாய்ந்தபடி உள்ளது. படமே கைவிடப்பட்டு விட்டதாக திடீரென ஒரு செய்தியை இப்போது உலவ விட்டுள்ளனர். ஆனால் இதை படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், படத்தை தயாரிக்கப் போகும் ஈராஸும் மறுத்துள்ளனர்.
ரஜினிகாந்த் ஒரு சாதாரண சூப்பர் ஸ்டார் அல்ல என்பதை இன்னும் யாரும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. அவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழ் திரையுலகம் நூறு அடி எடுத்து வைக்கும். அப்படி ஒரு சக்தி வாய்ந்த திரை நட்சத்திரம் ரஜினி. அப்படிப்பட்ட ரஜினியை, அவரது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஏன் இப்படி நெருக்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
மிகப் பெரிய அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடுமையான மருத்துவப் போராட்டம் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனைப் போராட்டங்களின் காரணமாக மீண்டும் புதுப் பொலிவுடன் ரஜினி திரும்பி வந்துள்ளார். ஆனால் அவர் முழுமையாக குணமடைந்து, பழைய ரஜினியைப் போல மாறி நடிப்பதற்கு நிச்சயம் கால அவகாசம் பிடிக்கும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அவர் குணமடைந்து விட்டாலும் கூட உடனடியாக அதிரடிப் படம் ஒன்றில், நடிக்க வைப்பது என்பது நிச்சயம் உடல் நலனைப் பாதிக்கவே செய்யும்.
ஆனால் அவர் முழுமையாக குணமடைவதற்கு முன்பே ராணா படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் அவரது உண்மையான ரசிகர்கள் நிச்சயம் கவலைப்படவே செய்வார்கள். ராணா, ரஜினியின் கனவுப் படம் என்பதில் சந்தேகமில்லை. அதில் நடிக்க ரஜினி ஆர்வமாகவே இருக்கிறார். இப்போதே படப்பிடிப்பை ஆரம்பியுங்கள் என்று அவர் கூறி வருவதாகவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் கூறுகிறார். படம் கைவிடப்படவில்லை என்றே படத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் கூறியுள்ளது.
ஆனால் அவர் முழுமையாக குணமடைந்து, பழைய ரஜினியாக, புலிப் பாய்ச்சலுடன் மீண்டும் நடிக்கும் அளவுக்கு அவரது உடல் நலமடைந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே ரிஸ்க் எடுத்து நடிக்க வைத்து மறுபடியும் அது அவரது உடல்நலனைப் பாதித்து விடக் கூடாது என்ற கவலை உண்மையான ரசிகர்களுக்கு உள்ளது.
ரஜினியின் ராணா உருவாவது உறுதி, அதில் ரஜினியைப் புதுப் பொலிவுடன் ரசிகர்கள் காணப் போவது உறுதி. அதேசமயம், அவரது உடல் நலனைப் புறம் தள்ளி விட்டு அவரைப் படப்பிடிப்புக்குக் கூட்டிக் கொண்டு போய் மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடாது என்று திரையுலகிலும் ரஜினியின் விசுவாசிகள், நண்பர்கள் கருதுகிறார்கள். ரஜினி நலமாக இருந்தால்தான் தமிழ் திரையுலகம் பல மடங்கு சுகமாக இருக்கும் என்பது திரையுலகினர் ஒவ்வொருவரின் கருத்துமாகும்.
மேலும், ரஜினி எப்போது நடித்தாலும் அதை ரசிப்பதற்கும், பிரமாண்டமாக வரவேற்பதற்கும் ரசிகர்கள் ஒருபோதும் சளைத்ததில்லை. எனவே ராணா சற்று 'லேட்'டாக வந்தாலும் 'லேட்டஸ்டாக' வரட்டுமே என்றுதான் உண்மையான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
ராணாவை விட ரஜினியின் உடல்நிலைதான் மிகவும் முக்கியம் என்றும் உண்மையான ரசிகர்கள் கருதுகிறார்கள்.