twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு - கமல் தொடங்கி வைத்தார்

    By Staff
    |

    Kamal Haasan
    சென்னையில் இன்று நடந்த ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பை நடிகர் கமல்ஹாசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    சென்னை ஹெரிடேஜ் மற்றும் மோட்டாரிங் கிளப் சார்பில் மை டி.வி.எஸ். ஹெரிடேஜ் கார் ராலி என்ற பழம்பெரும் கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

    எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ளடான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடந்த இந்த அணிவகுப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

    1926-ம் ஆண்டு முதல் 1975 ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்ட 110 கார்கள் 20 மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்றன.

    காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜின் 17 கார்கள் இதில் கலந்து கொண்டன. அதில் ஒன்று, ஜெமினிகணேசன் 1952-ல் வாங்கிய “போர்த் பெர்பெக்ட்" என்ற காரும் அடக்கம்.

    தயாரிப்பாளர் எம். எஸ். குகனின் 7 கார்களும் இதில் கலந்து கொண்டன.

    பள்ளி வளாகத்தில் புறப்பட்ட கார்கள் எழும்பூர் சாலைகளில் வலம் வந்து மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், பழைய கார்களை புராதன பொருட்கள் போல பாதுகாப்பது நமது பொறுப்பு. மூதாதையர்களின் வாழ்க்கையை பற்றி அவர்களது சந்ததியினர் தெரிந்து கொள்ள இது உதவும்.

    பெட்ரோல் மூலம் இயங்கக் கூடிய கார் என்றாலும் இவற்றை பெற்றோர் போல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X