»   »  அஜீத்தின் ரீமேக் மோகம்

அஜீத்தின் ரீமேக் மோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ajith

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பில்லா ரீமேக் கொடுத்த தெம்பில், அஜீத் தனது அடுத்தடுத்த படங்களும் ரீமேக் ஆகவே இருக்க வேண்டும் என விரும்புகிறாராம். இதன் விளைவு ராஜு சுந்தரம் இயக்கத்தில் ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகம் தனது அடுத்த படத்திற்கு ஷாருக்கானின் சூப்பர் ஹிட் படமான 'மே ஹூன் நா' வை பெரிய தொகை கொடுத்து வாங்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் கதை, மிகவும் சுவாரஸ்யமானது. காலம் போன காலத்தில் மீண்டும் தனது கல்லூரி வாழ்க்கைக்குத் திரும்ப நினைக்கிறான் கதாநாயகன். ஆனால், கல்லூரியில் உடன் படிக்கும் சக மாணவர்களும், ஆசிரியர்களும் ஏகத்திற்கும் கிண்டலடிக்கிறார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாக இருந்து அவர்களின் மனங்களை வெல்லுகிறான் கதாநாயகன். கூடவே பாடம் சொல்லித் தரும் இளம் பெண் லெக்சரரின் காதலையும் வெல்லுகிறார்.

இந்தக் கதை தனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என ராஜுவிடம் கூறியதோடு, அந்த லெக்சரர் பாத்திரத்திற்கு கத்ரீனா கைப்தான் ஏற்ற ஜோடியாக இருப்பார் எனவும் அஜீத் கூறினாராம்.

இதன் பிறகுதான் கத்ரீனா கைபை ஜோடியாக ஒப்பந்தம் செய்ய பிரபுதேவா, சல்மான் கான் என தலையைச் சுற்றி மூக்கதைத் தொட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்குப்பிறகு சிவாஜி பிலிம்ஸுக்காக தான் நடிக்கப் போகும் படமும் ரீமேக் ஆகவே இருக்கட்டும் என அஜீத் தெரிவிக்க, உடனே தயாரிப்பாளர் பிரபு, தனது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புதிய பறவை படத்தை அஜீத்துக்கு நினைவுபடுத்தியிருக்கிறார்.

ஹாங்காங்கில் ஷூட்டிங் முடித்து விட்டு சென்னை திரும்பிய அஜீத், வெள்ளிக்கிழமை புதிய பறவையை தனது இயக்குநர்களுடன் அமர்ந்து பார்த்திருக்கிறார். படம் அவரை ரொம்பவே இம்ப்ரஸ் செய்து விட்டதாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து தயாரிப்பாளர் பிரபுவிடம் கேட்டபோது, புதிய பறவை படத்தைப் பார்த்த அஜீத், அந்தக் கதையை தனக்கேற்ற மாற்றங்களுடன் படமாக எடுத்தால் நன்றாகத்தான் இருக்கும் என என்னிடம் தெரிவித்தார். அதற்கான வேலைகளில்தான் இப்போது பரபரப்பாக உள்ளோம். ஸ்க்ரிப்ட் ஒர்க் முடிந்த பிறகு, அது அஜீத்துக்கு பிடித்திருந்தால், படப்பிடிப்பை தொடங்குவோம் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil