»   »  தசாவதாரத்தில் 8 அடி மனிதன்!

தசாவதாரத்தில் 8 அடி மனிதன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kamal
தசாவதாரம் படத்தில் ஏற்கனவே 10 அவதாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எட்டு அடி உயர மனிதன் ஒருவரை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம் கமல்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பிரமாண்டமான ஒருவர், கமல்ஹாசனின் தீவிர பாதுகாவலராக கூடவே வருவார். பீம் பாய் பீம் பாய் என்று பாப்புலரான அந்த கேரக்டரை யாரும் மறந்திருக்க முடியாது.

இப்போது தசாவதாரத்திலும் ஒரு மகா பிரமாண்டமான நபர் ஒருவர் வருகிறாராம். சர்தார் வேடத்தில் வரும் கமல்ஹாசனுக்கு பாதுகாப்பாக கூடவே இவர் வருகிறாராம்.

எட்டு அடி உயரமுள்ள இவர் அமெரிக்கர். கமல்ஹாசனின் பிரபத்தையும், அவரது நடிப்புத் திறமையையும் அறிந்த அவர் உடனடியாக அந்தக் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.

இப்படத்தின் ஆரம்ப காட்சி 12வது நூற்றாண்டில் தொடங்குகிறதாம். இந்தக் காட்சிதான் படத்திலேயே மிக மிக முக்கியமான காட்சியாக இருக்குமாம். அந்தக் காட்சியில் சோழ மன்னராக வருகிறார் நெப்போலியன். சண்டையில் தோற்றதால் கோபமடைந்து சாமி சிலையை தூக்கி கடலில் போட்டு விடுகிறார் நெப்போலியன்.

அப்போது நாத்திகரான கமல்ஹாசன் அந்த சிலையை காப்பாற்றி கடலிலிருந்து மீட்டெடுக்கிறார். அங்கிருந்து படத்தின் கதை தொடங்குகிறதாம். அந்தக் காட்சியில் வயோதிகர் வேடத்தில் கமல்ஹாசன் வருகிறாராம்.

முதல் சீனே கலக்கலா இருக்கே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil