For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கார்த்திக்குக்கு பிறந்த ஞானோதயம்!

  By Staff
  |

  Arun Vijay, Dhanshika and Karthik
  கண்ணை மூடிக் கொண்டு குண்டக்க மண்டக்க அலை பாய்ந்து, தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த கார்த்திக் ஒரு வழியாக சரியான ரூட்டைப் பிடித்து விட்டார். அது- மீண்டும் நடிப்பது என்பது.

  ஒருவரை உசுப்பி விட்டு ஊறுகாய் போடத் துடிப்போர் தமிழகத்தில் அதிகம். அவர் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை உசுப்பி விட்டு அரசியலில் புகுத்தி போண்டியாக்கி அசிங்கப்படுத்தினர்.

  அதே போல கொஞ்ச வருஷத்திற்கு முன்பு ரஜினியையும் அரசியலுக்குக் கூட்டி வந்து தாங்கள் குளிர் காய துடித்தது ஒரு கும்பல். இதற்கு அதிபுத்திசாலியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கையாளரின் தூண்டுதல் வேறு.

  ஆனால் கமல் போன்ற நண்பர்களின் அட்வைஸைக் கேட்டு ரஜினி உஷாராகி தப்பி விட்டார். அந்த அதிபுத்திசாலியிடமிருந்தும் ஒதுங்கிவிட்டார்.

  இன்னும் ரஜினியை எப்படியாவது தூக்கிக் கொண்டு வந்து விட வேண்டும் என அலைபாய்ந்தபடிதான் உள்ளது அந்தக் கும்பல். இருப்பினும் ரஜினி இன்னும் கூட உஷாராகத்தான் இருப்பதாக தெரிகிறது.

  ஆனால் சிவாஜியை விட மிக மோசமான முறையில் பந்தாடப்பட்டவர் கார்த்திக். சரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்கியபோது அதற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து அண்ணே, அடுத்த முதல்வர் நீங்கதான் என்று சிலர் தூபம் போட குளிர்ந்து போய் என்ன ஏது என்று, ஆழம் கூட பார்க்காமல் அரசியல் கடலில் குதித்து விட்டார் கார்த்திக்.

  ஆனால் அங்கு அலைந்து திரிந்த சுறாக்களையும், திமிங்கலங்களையும் பார்த்து பயந்து பீதியாகி இப்போது கரை ஒதுங்கி கமுக்கமாக இருக்கிறார்.

  பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து துரத்தப்பட்டு, புதுக் கட்சியும் தொடங்கி விட்ட கார்த்திக் இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை.

  இடையில் விருதுநகரில் போட்டியிட்டு மானம் போனதுதான் மிச்சம். இப்போது உருப்படியான வேலையில் சத்தம் போடாமல் இறங்கியுள்ளார் கார்த்திக். அது அமைதியாக நடிப்பைக் கவனிப்பது.

  மணிரத்தினத்தின் ராவண் படத்தில் அசத்தலான கேரக்டர் செய்துள்ளாராம் கார்த்திக். அடுத்து மாஞ்சா வேலு என்ற படத்தில் கேரக்டர் ரோல் செய்கிறார். அதாவது ஹீரோவுக்கு அண்ணனாக வருகிறார் இப்படத்தில்.

  முதலி்ல் பிரபுதான் இந்த ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் பிரபுதான், கார்த்திக்கைப் பார்த்துப் பேசி, பேசாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்க, அதுதான் உங்களுக்கு நல்லது என்று அட்வைஸ் கூறி இந்த ரோலில் நடிக்க சிபாரிசு செய்தாராம்.

  பிரபு சொன்னதில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்ட கார்த்திக்கும், படு உற்சாகமாக இந்தப் படத்தில் நடித்து வருகிறாராம்.

  யூனிட்டோட்டு படு நட்பாக பழகி வரும் கார்த்திக், தனது காட்சிகள் முடிந்தாலும் கூட கிளம்பிப் போகாமல் அங்கேயே இருந்து மற்றவர்கள் நடிப்பைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாராம்.

  படு உற்சாகமாக நடித்து வரும் கார்த்திக்கால் அந்த யூனிட்டே சந்தோஷமாக காணப்படுகிறதாம்.

  இந்த மாற்றம் குறித்து கார்த்திக் கூறுகையில், 5 வருடங்களாக நடிக்​கா​மல் இருந்​தேன். திடீ​ரென ஒரு நாள் மணி​ரத்​னம் அழைத்து "ராவ​ணன்' படத்​தில் நடிக்க வேண்டும் என்​றார். அவ​ரு​டைய அன்​புக்​காக நடித்​தேன்.

  அந்​தப் படம் முடிந்​த​வு​டன் மாஞ்சா வேலு படத்​தில் நடிக்க அழைப்பு வந்​தது. இதில் எனக்கு முக்​கி​ய​மான கேரக்​டர். அருண்​ வி​ஜய்க்கு அண்​ண​னாக ஒரு போலீஸ் அதி​காரி வேடத்​தில் நடிக்​கி​றேன்.

  நீண்ட இடை​வெ​ளிக்​குப் பின் நடித்​தா​லும் ஷூட்​டிங்​கின்​போது என் மீது அனை​வ​ரும் காட்​டிய அன்பு என்னை நெகிழ வைத்​தது. வீட்​டுக்​குச் செல்​லக் கூட மனம் இல்லை.

  இவ்​வ​ளவு அன்பை இத்​தனை நாளாக 'மிஸ்' பண்​ணி​விட்​டோமே என்ற வருத்​தம் ஏற்​பட்​டது. எப்​படி?​ ஏன்?​ இந்த இடை​வெளி ஏற்​பட்​டது என எனக்கே தெரி​ய​வில்லை.

  நான் நடித்​த​போது இருந்​ததை விட இப்​போது தொழில்​நுட்​பம் பல மடங்கு வளர்ச்​சி​ய​டைந்​துள்​ளது. மணி​ரத்​னம் மூலம் மீண்​டும் என்​னு​டைய இரண்​டா​வது இன்​னிங்ஸை
  புத்​து​ணர்ச்​சி​யு​டன் தொடங்​கி​யி​ருக்​கி​றேன்.

  இனி பழைய கார்த்​திக்கை பார்க்க முடி​யாது. இப்​போது நான் புது​மு​கம். இப்​போது ஃபீல்​டில் உள்​ள​வர்​க​ளுக்கு ஏற்ப
  இன்​னும் என்னை மெரு​கேற்​றிக் கொண்​டி​ருக்​கி​றேன்.

  அருண்​ வி​ஜய்யை நிஜ வாழ்க்​கை​யி​லும் தம்​பி​யாக
  ஏற்​றுக்​கொண்​டி​ருப்​ப​தால் ஷூட்​டிங்​கில் மிக யதார்த்​த​மாக நடிக்க முடி​கி​றது.

  நான் மீண்​டும் நடிக்க வரு​வ​தற்கு என் நண்​ப​ரும்
  நடி​க​ரு​மான பிர​பு​தான் முக்​கி​யக் கார​ணம். மாஞ்சா வேலு படத்​தில் பிர​பு​வும் ஒரு முக்​கி​யக் கதா​பாத்​தி​ரத்​தில்
  நடிக்​கி​றார் என்றார்.

  ரூட்டைப் புடி என்று ஒரு படத்தில் கார்த்திக் பாட்டுப் பாடி நடித்திருப்பார். ஆனால் அவரே இப்போதுதான் சரியான ரூட்டைப் பிடித்துள்ளார்.

  அப்படியே திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தால் ஒரு நல்ல நடிகரை தக்க வைத்துக் கொண்ட பெருமை சினிமாவுக்குக் கிடைக்கும்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X