»   »  குருவி படத்தில் விஜய் ராப் டான்ஸ் ஆடியுள்ளாராம்.

குருவி படத்தில் விஜய் ராப் டான்ஸ் ஆடியுள்ளாராம்.

Subscribe to Oneindia Tamil
Vijay
அழகிய தமிழ் மகன் சறுக்கலை மறந்து விஜய் படு உற்சாகமாக 'குருவி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் இதுவரை நல்லவிதமாக வந்துள்ளதாம். இதனால் குஷியாகியுள்ளார் விஜய்.

கில்லியை விட குருவி மிகப் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் விஜய்.

படத்தில் ராப் பாடகர் யோகி.பியின் பாடலுக்கு விஜய் ராப் டான்ஸ் ஆடுகிறாராம். யோகி.பி. மலேசியாவைச் சேர்ந்த டாப் பாடகர் மற்றும் டான்ஸர் ஆவார்.

இந்தப் பாடலுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். விஜய் ரசிகர்களைக் கவரக் கூடிய வகையில் பாடலை அதிரடியாக வடிவமைத்துள்ளாராம் வித்யாசாகர்.

படத்தின் பெரும்பகுதியை சென்னை மற்றும் மலேசியாவில் எடுக்கின்றனர். இப்போது தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும், புனேவிலும் படம் வளர்ந்து வருகிறதாம்.

முதல்வர் கருணாநிதியின் பேரனும், அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிதான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பது நினைவிருக்கலாம். விஜய்க்கு ஜோடியாக திரிஷா திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆட்டத்தில் விஜய் அசகாய சூரர் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த ராப் ஆட்டத்தில் விஜய் எப்படிக் கலக்கியிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறதாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil