twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியர்களுக்கு டிஸிபிளின் மட்டும் இருந்துட்டா...! - ரஜினி

    By Chakra
    |

    நம்மிடம் எல்லா திறமையும் இருக்கா.. ஆனா டிஸிப்ளின் இல்லே. அந்த டிஸிப்ளின் மட்டும் இருந்துட்டா எங்கேயோ இருப்போம், என்றார் ரஜினிகாந்த்.

    தீபாவளியின்போது நடிகர் ரஜினியின் சிறப்புப் பேட்டியை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள்.

    இந்தப் பேட்டியின்போது ரஜினி கூறுகையில், "வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் எல்லாமே பக்கா பிளானிங்தான். சொன்னால் சொன்ன நேரத்துக்கு செய்து முடிக்கிறார்கள். தொழிலில் அத்தனை பர்பெக்டாக இருக்கிறார்கள்.

    அதே நேரம் திறமையில் நம்மாளுங்களை அடிச்சிக்க முடியாதுதான். ஆனால் அந்த டிஸிப்ளின்தான் நம்ம கிட்ட இல்லே. டிஸிப்ளின் மட்டும் இருந்திட்டா, நாம எங்கேயோ இருப்போம்... அந்த டிஸிப்ளினை நான் கடைப் பிடிக்கிறேன். அதுதான் இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

    எந்திரன் படம் வெற்றி பெறும் என்பது தெரியும். ஆனால் இந்த பிரமாண்ட வெற்றி எதிர்ப்பார்க்காதது. என்னதான் படம் எடுத்தாலும் முதல் வாரத்திலேயே விஷயம் தெரிந்துவிடும். யாரும் அதை மறைக்க முடியாது. ஜனங்க முட்டாள் இல்லை. அவங்களை முட்டாள்னு நெனக்கிறவன் மிகப்பெரிய முட்டாள். ஆனால் எந்திரன் வந்த நாளன்றே மக்கள் அப்படியே தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்..."., என்றார்.

    எந்திரன் படம் உலகளவில் அதிக எண்ணிக்கையில் வெளியானது மற்றும் அதன் சர்வதேச வெற்றி குறித்து கூறுகையில், "இது தமிழரின் பெருமைதானே... ஹாலிவுட்டுக்கு இணையாக ஒரு தமிழ்ப் படம் வெளியாகி வெற்றிபெற்றது தமிழர்களுக்கு எல்லாம் எத்தனை பெருமை...

    எந்திரன் வெற்றி 60 சதவீதம் திட்டமிட்டது. 100 சதவீதம் ஆண்டவன் ஆசி..." என்றார்.

    எந்திரன் அனுபவங்களை புத்தமாக எழுதும் திட்டமிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X