»   »  சிங்கம் புலி திருட்டு டிவிடி... போலீஸில் ஜீவா புகார்!

சிங்கம் புலி திருட்டு டிவிடி... போலீஸில் ஜீவா புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் புலி படத்தின் திருட்டு டிவிடிக்கள் பர்மா பஜாரில் கூவிக் கூவி விற்கப்படுவதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகர் ஜீவா.

ஜீவா நடித்த சிங்கம்புலி என்ற படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் ஜீவா, சாய் ரமணி ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அதில், "சமீபத்தில் ரிலீசான சிங்கம்புலி படத்தின் திருட்டு சி.டி.க்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

போலீஸ் கமிஷனரை சந்தித்த பின் நடிகர் ஜீவா நிருபர்களிடம் கூறுகையில், "சுமார் 1 1/2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு இப் படத்தை எடுத்தோம். ஆனால் படம் வெளியான 2 நாளிலேயே திருட்டு சி.டி.க்கள் விற்பனைக்கு வந்து விட்டன. இவற்றை பள்ளிகள் மற்றும் கோவில்களின் அருகே கூவி கூவி விற்கின்றனர். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் திருட்டு டி.வி.டி.க்களை பார்க்க முடியாது. அதுபோன்ற நிலையை இங்கும் ஏற்படுத்த வேண்டும். அது போலீஸ் மற்றும் அரசின் கையில்தான் உள்ளது," என்றார்.

English summary
Actor Jeeva lodged a police complaint with Chennai Commissioner of Police on the sale of his recently released film Singam Puli. In his complaint Jeeva told that the police should be curbed the sale of Singam Puli DVDs in black market.
Please Wait while comments are loading...