twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம்.. இத்தாலி பல்கலை. வழங்குகிறது!

    By Shankar
    |

    தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது இத்தாலியில் உள்ள மிலன் பல்கலைக்கழகம்.

    இந்தியாவிலேயே அதிக அளவு கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றிருப்பது தமிழ் சினிமா நடிகர்கள்தான். இந்த 'டாக்டர்கள்' பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் நடிகர் விக்ரம்.

    சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த 'மிலன் 2011' என்ற கலைநிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபோது நடிகர் விக்ரம் இத்தகவலைத் தெரிவித்தார்.

    200 கல்லூரிகளைச் சேர்ந்த 7000 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விக்ரமுடன் நேருக்கு நேர் உரையாடலிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு உற்சாகத்துடன் பதிலளித்தார் விக்ரம்.

    நடிகர்கள் கமல்ஹாஸன், மனோரமா, விஜய், இயக்குநர் ஷங்கர் உள்பட பலருக்கு பல்வேறு தனியார் பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழகப்பா, சத்யபாமா மற்றும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று கல்வி அமைப்புகள் டாக்டர் பட்டங்களை அளிக்க முன்வந்தன. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

    English summary
    Leading actor Vikram was conferred an honorary doctorate in the field of Fine Arts by an Italian University in Milan. Vikram himself announced it while inaugurating Milan 2011, SRM University's culturals.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X