»   »  விக்ரமுக்கு இன்னொரு 'ராஜபாட்டை'யாக அமைந்த 10 எண்றதுக்குள்ள!

விக்ரமுக்கு இன்னொரு 'ராஜபாட்டை'யாக அமைந்த 10 எண்றதுக்குள்ள!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமந்தா ரொம்ப எதிர்ப்பார்த்த 10 எண்றதுக்குள்ள, 24 மணி நேரத்தில் காலியாகிவிட்டது. ஆம், படம் தோல்வி என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்திவிட்டார்கள்.

விக்ரமின் கேரியரில் சில படங்கள் மறக்க முடியாத தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. மஜா, பீமா, கந்தசாமி, ராஜபாட்டை, தாண்டவம்... இந்த வரிசையில் சேரவிருக்கிறது 10 எண்றதுக்குள்ள.

10 Endrathukkulla questions Vikram's future

'தலைப்பைப் போலவே படமும் மொக்கையாக இருப்பதாக' அனைத்துத் தரப்பினரும் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதுவும் சமூக வலைத் தளங்களில் பிரித்து மேய்ந்து விட்டனர் படம் பார்த்தவர்கள்.

சிறந்த நடிகரான விக்ரம், பெரும் பாடுபட்டு தனக்கென ஒரு இடம் பிடித்தார். நியாயமாக அவர் பெற்ற வெற்றிகளுக்கு இப்போது கமலுக்கு அடுத்த இடத்தில் இருக்க வேண்டியவர். ஆனால்?

காரணம் அவரேதான்.

புதிய இயக்குநர்களுக்கு கால்ஷீட் இல்லை என்பது இவர் பாலிசி. மூன்று படங்களாவது இயக்கியிருக்க வேண்டுமாம். இதனை பகிரங்கமாகவே கூறிவிட்டார்.

பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தால்தான் சீக்கிரம் உச்ச நட்சத்திரமாக முடியும் என்பது இவர் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால்தான் கடந்த பத்து ஆண்டுகளில், மஜா, கந்தசாமி, ராவணன், தெய்வத் திருமகள், ராஜபாட்டை, தாண்டவம்... இப்போது 10 எண்றதுக்குள்ள. இடையில் டேவிட் என்ற ரெண்டுங்கெட்டான் படம் ஒன்று. இந்த எட்டுப் படங்களில் தெய்வத் திருமகள் தவிர ஒரு படம் கூட ஓடவில்லை!

கதைத் தேர்விலும் அது வெளியாக வேண்டி காலகட்டம் எது என்பதைத் தீர்மானிப்பதிலும் விக்ரம் தொடர்ந்து தோற்று வருகிறார்.

இந்தத் தருணத்தில் கோட்டை விட்டால் மீண்டும் டப்பிங் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு நடத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்பது சினிமாவில் போராடிய விக்ரமுக்கு தெரியாததல்ல!

English summary
Vikram's latest release 10 Endrathukkulla has bombed at the box office and questions the actor's futur

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil