twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டைரக்டர் சங்க தேர்தல் திடீர் நிறுத்தம்!

    By Staff
    |

    Ritheesh
    நடிகர் ஜே.கே.ரித்தீஷ் ஆதரவு இயக்குநர்களின் கலாட்டாவால், இன்று நடைபெறவிருந்த திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது.

    இயக்குநர்கள் அனைவரும் இவ்விஷயம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நாளை முறையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் இப்போதைய தலைவராக விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு தற்போது வந்துவிட்டது.

    எனவே புதிய நிர்வாகிகளைத் தேரந்தெடுக்க இச்சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், முன்னாள் தலைவர் ஆர்.சி.சக்தியும் போட்டியிட்டனர்.

    இந்நிலையில் நடிகரும் தமிழக அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனுமான ஜே.கே.ரித்தீஷின் ஆதரவாளர் பாவா என்பவர் தலைமையில் சில இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் இந்த தேர்தலில் போட்டியிட தங்களையும் அனுமதிக்க வேண்டும் என திடீரென்று கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டனர். நேற்று இரவு இவர்கள் ஒரு குழுவாகச் சென்று தேர்தல் நடைபெறவிருந்த ஆர்ட் டைரக்டர்ஸ் யூனியன் அலுவலகம் முன்பு போடப்பட்டிருந்த ஷாமியானாவைப் பிய்த்துவிட்டதாக்க் கூறப்படுகிறது.

    இன்று தேர்தல் நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் மீண்டும் தேர்தல் நடைபெறும் இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர் இயக்குநர் சங்கள் நிர்வாகிகள். போலீஸ் வந்தபிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புக்கு வந்த போலீசாருக்கு முன்பாகவே ரித்தீஷின் ஆதரவாளர்கள் தேர்தலை நடத்த விடாமல் பெரும் கலாட்டாவில் ஈடுபட்டார்களாம்.

    இதைத் தொடர்ந்து தேர்தலை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு, நிர்வாகிகள் அனைவரும் கலைந்தனர்.

    மேற்கொண்டு என்ன நடவடிக்கையில் இறங்குவது என்பது குறித்து முடிவு செய்ய நடிகர் விஜய்க்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இயக்குநர்கள் அனைவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் முறையிடுவதென்று முடிவு செய்துள்ளனர்.

    ஜே.கே.ரித்தீஷ் ஸ்டாலினுக்கு நெருக்கமனாவர் மற்றும் அமைச்சரின் நெருங்கிய உறவினர் என்பதால் அவரை நேரடியாகப் பகைத்துக் கொள்வதில் இயக்குநர்கள் பெரிதும் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

    நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறும்போது, அதில் நேரடியாக தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திட்டமும் ரித்தீஷுக்கு உள்ளதாம்

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X