»   »  குசேலனில் குழப்பமா?

குசேலனில் குழப்பமா?

Subscribe to Oneindia Tamil
Rajini
குசேலன் படத்தில் ஹீரோவின் கேரக்டர் குறித்து ரஜினிக்கும், இயக்குநர் பி.வாசுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இது பக்கா ரஜினி படமாக இருக்கும் என்று பி.வாசு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன கத பறயும் போள் படத்தை தமிழில் ரஜினிகாந்த், பசுபதியை வைத்து பி.வாசு ரீமேக் செய்யவுள்ளார். குசேலன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயனதாரா, ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஒரிஜினல் படத்தின் கதைப்படி சீனிவாசன்தான் ஹீரோ. மம்முட்டிக்கு மொத்தமே படத்தில் 9 சீன்கள்தான். சீனிவாசனுக்குத்தான் கதையில் முக்கியத்துவம் அதிகம். படம் தொடங்கி அரை மணி நேரத்திற்கு மம்முட்டி கேரக்டரே வராது. பிறகுதான் அவர் வருவார்.

ஆனால் தமிழில் அப்படி எடுக்க முடியாதே. எனவே ரஜினியின் கேரக்டரை ஹீரோவாக்கி விட்டார் பி.வாசு. பசுபதியை 2வது நாயகனாக்கியுள்ளார். ரஜினியின் கேரக்டர் படம் முழுக்க வருவது போல திரைக்கதையை மாற்றவுள்ளார் பி.வாசு.

மேலும், வழக்கமான ரஜினியின் அறிமுகப் பாடல் தவிர வேறு சில பாடல்களும் ரஜினிக்காக உருவாக்கப்படவுள்ளது. இதுதவிர தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்று ஆடும் கலக்கல் பாடலும் வாசுவின் திட்டத்தில் உள்ளது.

ஆனால் இதில் ரஜினிக்கு உடன்பாடில்லையாம். அதாவது, சீனிவாசன் எடுத்த கதையை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் எடுக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறாராம். தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் அவர் அபிப்பிராயப்படுகிறாராம்.

ஆனால் பி.வாசு இதற்கு உடன்படவில்லையாம். படம் முழுக்க நீங்கள் வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மற்றொரு வள்ளி ஆக படம் மாறி விடும் எனவும் ரஜினியிடம் வாசு கூறியுள்ளாராம்.

இப்படி இருவருக்கும் கருத்த வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தான் படத் தொடக்கம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வாசுவிடம் கேட்டபோது, முதலில் சிரித்தார். பின்னர், தமிழ் பதிப்பின் திரைக்கதை குறித்து முதலில் ரஜினி சாருக்கு சில சந்தேகங்கள் இருந்தது. ஆனால் நான் அவற்றை விளக்கி அவரது சந்தேகங்களைப் போக்கினேன்.

மறுபடியம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க ரஜினி படமாகவே இருக்கும். முத்து, சந்திரமுகி போல இதுவும் பக்கா ரஜினி படமாகவே இருக்கும்.

ரஜினி, விவேக் பங்கேற்கும் காமெடிக் காட்சிகள் வயிற்றைப் பதமாக்கப் போவது நிச்சயம். ரஜினியின் ஒப்புதலுடன் மேலும் பல புதிய விஷயங்களும் படத்தில் இடம் பெறும். விரைவில் படத் தொடக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார் வாசு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil