»   »  '12 செகண்ட்' செல்போன் காலால் சிறையில் கம்பி எண்ணும் நடிகர் திலீப்

'12 செகண்ட்' செல்போன் காலால் சிறையில் கம்பி எண்ணும் நடிகர் திலீப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகர் திலீப் போலீசிடம் எப்படி சிக்கினார் என்பது தெரிய வந்துள்ளது.

நடிகை பாவனாவை கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை

விசாரணை

கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் திலீப்பிடம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்போது பாவனா விஷயம் பற்றி உங்களுக்கு எப்படி தெரிய வந்தது என்று போலீசார் திலீப்பிடம் கேட்டனர்.

ஆன்டோ ஜோசப்

ஆன்டோ ஜோசப்

தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தனக்கு போன் செய்து பாவனாவுக்கு நடந்த கொடுமை பற்றி தெரிவித்ததாக திலீப் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் ஆன்டோவிடம் விசாரித்தனர்.

திலீப்

திலீப்

சம்பவம் நடந்த இரவே நான் திலீப்புக்கு போன் செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. மறுநாள் காலை போன் செய்து விபரத்தை தெரிவித்தபோது அப்படியா என்று மட்டும் கேட்டார் என ஆன்டோ ஜோசப் போலீசாரிடம் கூறினார்.

12 செகண்ட்

12 செகண்ட்

போலீசார் திலீப்பின் கால் ஹிஸ்டரியை எடுத்து பார்த்தபோது அவர் ஆன்டோவிடம் வெறும் 12 செகண்டுகள் தான் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து தான் போலீசாருக்கு திலீப் மீதான சந்தேகம் வலுவடைந்தது.

English summary
Actor Dileep's 12 second call with film producer Anto Joseph has landed him in prison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil