»   »  மீண்டும் டிவிக்கு வரும் ஷாருக்

மீண்டும் டிவிக்கு வரும் ஷாருக்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shahrukh khan with his son Aryan and daughter Suhana
'கோன் பனேகா குரோர்ப' கேம் ஷோவில் கலக்கிய ஷாருக்கான் மீண்டும் இன்னொரு பிரமாண்டமான ரியாலிட்டி கேம் ஷோவை நடத்த வருகிறார்.

ஸ்டார் பிளஸ் சானலில் ஒளிபரப்பாகவுள்ள 'Kya Aap Paanchvi Pass Se Tez Hain?' என்ற கேம் ஷோவை ஷாருக் ஏற்று நடத்தவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடன், பெரியவர்கள் மோதுவார்கள். இந்தப் போட்டியின் பரிசுத் தொகை ரூ. 5 கோடியாகும்.

ஸ்டார் பிளஸ் சானலில் ஏற்கனவே ஒளிபரப்பான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை முன்பு அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். அப்போது அதன் பரிசுத் தொகை ரூ. 1 கோடியாகும். பின்னர் ஷாருக் தொகுத்து வழங்கியபோது பரிசுத் தொகை ரூ. 2 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய கேம் ஷோவின் பரிசுத் தொகை ரூ. 5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது டிவி உலகில் புதிய புரட்சியாக கருதப்படுகிறது.

இந்த ஷோ எப்போது ஒளிபரப்பாகும் என்பதை ஸ்டார் பிளஸ் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இது வாரம் ஒருமுறை நிகழ்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது.

'Are You Smarter than a 5th Grader?' என்ற ஆங்கில டிவி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய இந்தி கேம் ஷோ வடிவமைக்கப்பட்டுள்ளது. வயதில் சிறியவர்களுக்கும், வயதில் பெரியவர்களுக்கும் இடையிலான அறிவுத் திறமையை உரசிப் பார்க்கும் கேம் ஷோ இது.

இந்தி கேம் ஷோவில், பள்ளிக்கூட மாணவர்கள் குழு கேட்கும் கேள்விகளுக்குப் பெரியவர்கள் பதில் அளிக்க வேண்டும். சரியாக பதிலளிக்காவிட்டால் மாணவர்களுக்குப் பரிசு கிடைக்கும். பதிலளித்தால் பெரியவர்களுக்குப் பரிசு கிடைக்கும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil