»   »  ரஜினி படத்தில் அர்ஜூன்?

ரஜினி படத்தில் அர்ஜூன்?

Subscribe to Oneindia Tamil
Arjun with Nila
ரஜினியின் ரோபோட் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூனும் நடிக்கவிருப்பதாக புது செய்தி பரவியுள்ளது.

ஷங்கரின் பிரமாண்டப் படைப்பான ரோபோட்டில் நடிக்கும் கலைஞர்கள் தேர்வு படு கமுக்கமாக நடந்து வருகிறது. ரஜினியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராயை முடிவு செய்தனர். இப்போது பிற கலைஞர்கள் பக்கம் ஷங்கர் பார்வையைத் திருப்பியுள்ளார்.

படத்தில் வரும் ஒரு முக்கிய கேரக்டருக்கு அர்ஜூனை, ஷங்கர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது வில்லன் ரோல் அல்லவாம்.

சூப்பர் நடிகர் ஒருவருடன் அர்ஜூன் இணைவது இது முதல் முறையல்ல. முதன் முதலில் அவர் உலக நாயகன் கமல்ஹாசனுடன், குருதிப் புணல் படத்தில் இணைந்து நடித்தார். அதில் கமலுடன் சேர்ந்து, அர்ஜூன் கேரக்டரும் வெகுவாக பேசப்பட்டது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டாருடன் தற்போது இணையப் போகிறார் அர்ஜூன்.

தனிப்பட்ட முறையில் அர்ஜூன், ரஜினியின் விசிறியும் கூட. தனது ஆசான் என்று ரஜினியை அவர் அடிக்கடி வர்ணிப்பார்.

அர்ஜூனுக்குப் பெரிய பிரேக் கொடுத்த படம் ஜென்டில்மேன். அதேபோல இடையில் தொய்வடைந்து கிடந்த அர்ஜூனின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் முதல்வன். இரு படங்களும் ஷங்கரின் இயக்கத்தில் உருவானவை.

முதல்வன் படத்தில் முதலில் ரஜினிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ரஜினி மிக நெருக்கமாக இருந்ததால் சர்ச்சை வந்து விடப் போகிறது என்பதால் அப்படத்தில் நடிக்க மறுத்தார். ஆனால் அர்ஜூனை நடிக்க வைக்கலாம் என ரஜினிதான் ஷங்கரிடம் பரிந்துரைத்தாக கூட கூறப்பட்டது.

இப்படி முந்தைய நிகழ்வுகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ரோபோட் படத்தில் ரஜினியுடன் அர்ஜூன் நடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil