தோட்டாவுடன் விமானம் ஏற வந்த நடிகர் சன்னி தியோலின் மேக்கப் மேன் கைது

By Sudha

Sunny Deol
மும்பை: விமானம் ஏறுவதற்காக நடிகர் சன்னி தியோலின் மேக்கப் மேனின் பையில் துப்பாக்கித் தோட்டா இருந்ததால் அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

சன்னியின் மேக்கப் மேன் ஹேமந்த் ஜாதவ். இவர் மும்பை விமான நிலையத்திற்கு நேற்று இரவு எட்டே முக்கால் மணியளவில் வந்தார். நியூயார்க் செல்வதற்காக அவர் வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பேக் சோதனையிடப்பட்டது. அதில், 7 துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்ததை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது இவற்றை நடிகர் சன்னி தியோலிடம் தருவதற்காக செல்வதாக கூறினார் ஜாதவ்.

நியூயார்க்கில் நடிகை கங்கனா ரணவத்துடன், நடித்து வரும் படத்திற்கான ஷூட்டிங்கில் சன்னி தியோல் இருப்பதாகவும், ஒரு பையைக் கூறி அந்தப் பையுடன் கிளம்பி வருமாறும் அவர் கூறினார். இதனால்தான் நான் இந்தப் பையுடன் கிளம்பினேன் என்று கூறினார் ஜாதவ்.

இதையடுத்து சாஹர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் வந்து பையைக் கைப்பற்றியதுடன், ஜாதவையும் கைது செய்தனர். மேலும், நடிகர் சன்னி தியோல் வைத்திருக்கும் துப்பாக்கி முறையாக உரிமம் பெற்றதா என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X