»   »  'ஏகன்' அஜீத்!

'ஏகன்' அஜீத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ajith
ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு ஒரு வழியாக பெயர் சூட்டப்பட்டு விட்டது. ஏகன் என்ற பெயரை இறுதி செய்துள்ளனராம்.

டான்ஸ் ஆடி வந்த ராஜு சுந்தரம், இப்போது இயக்கப் போகிறார். பரட்டை என்கிற அழகுசுந்தரத்திலேயே அவர் இயக்குநராகியிருக்க வேண்டியது. ஆனால் திடீரென அவர் கழன்று கொண்டு விட்டதால், கடைசியில் சுரேஷ் கிருஷ்ணாவைக் கூப்பிட்டு அப்படத்தை இயக்க வைத்தனர்.

இப்போது அஜீத் மூலம் இயக்குநராகிறார் ராஜு சுந்தரம். இப்படத்திற்கு அக்பர் என பெயரிடப்பட்டுள்ளதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் அதை அஜீத்தும், ராஜு சுந்தரமும் மறுத்து விட்டனர். பெயர் சூட்டப்படாத நிலையிலேயே ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் தீவிரமாகினர்.

முதலில் ஹீரோயினாக ஷ்ரியா புக் ஆனார். கடைசியில் அவரை தூக்கி விட்டு இப்போது காத்ரீனா கைபை நாயகியாக்கியுள்ளனர்.

சமீபத்தில் சத்தம் போடாமல் மலேசியாவில் வைத்து முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துள்ளனர். 2வது ஷெட்யூல் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் நீலகிரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் பெயர் முடிவாகியுள்ளது. 'ஏகன்' என்று பெயர் வைத்துள்ளனர். ஏகன் என்பது கேட்பதற்கு சுத்த தமிழ்ப் பெயர் போல தெரியும். ஆனால் இது சுத்தமான சமஸ்கிருதப் பெயர்.

ஏகன் என்றால் சிவன், நிரந்தரமானவன், சத்யமானவன் என்று பொருள். தமிழில் பெயர் வைத்தால்தான் வரி விலக்கு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படியே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தமிழ்ப் படப் பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சமஸ்கிருதத்தில் அஜீத் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டிருப்பது கோலிவுட்டினரை விழி விரிய வைத்துள்ளது. இந்தக் குழப்பம் அஜீத்துக்கும் வந்திருக்கும் போல. எனவேதான் வேறு டைட்டிலையும் யோசித்து வைக்குமாறு ராஜு சுந்தரத்தைக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும், ஏகன், இந்தியில் ஷாருக் கான் நடித்து வெளியான 'பிளாக்பஸ்டர்' படமான 'மே ஹூன் நா' வின் ரீமேக் ஆகும்.

அஜீத்துக்கும் சிவனுக்கும் சற்றே ஏழாம் பொருத்தம். ஏற்கனவே பரமசிவன் படம் அவரது காலை வாரி விட்டது. இப்போது சிவன் என்கிற பொருள் படும் ஏகன் என்ற பெயரை அஜீத் படத்துக்கு சூட்டியுள்ளனர். எனவே நல்ல தமிழ் வாத்தியாரை கலந்து பேசி சீக்கிரமாக டைட்டிலை மாற்றி விடுவார்கள் என நம்புவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil