தேர்தல் பிரசாரங்களில் ரஜினி படத்தைப் பயன்படுத்த ரசிகர்களுக்குத் தடை

தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் யாரையும் ஆதரித்து வாய்ஸ் கொடுப்பதில்லை என ரஜினி ஏற்கெனவே முடிவெடுத்திருந்தாலும், ரஜினிகாந்த் ரசிகர்களும் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போடுவது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். குறிப்பாக மீடியாவில் இதுகுறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் ரஜினிகாந்த் ஒப்புதலின் பேரில் தலைமை மன்ற பொறுப்பாளர் சுதாகர் போன் மூலம் தகவல் கொடுத்து உள்ளார்.
அதன் விவரம்:
"தலைவர் ரஜினிகாந்த் தற்போது 'எந்திரன்' படப்பிடிப்பில் முழு ஈடுபாட்டுடன் உள்ளார். அவரது மனம் புண்படாதபடி செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனினும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரவர் விருப்பப்படி விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். ஆனால் ரஜினியின் படத்தையோ, கொடியையோ யாரும் தேர்தலில் பயன்படுத்தக்கூடாது".
இதனைத் தொடர்ந்து மாவட்ட மன்ற நிர்வாகிகள், ரசிகர்களைக் கூட்டி, ரஜினியின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











