twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெட்னஸ்டே.. கமல் 'கன்ஃபர்ம்'!

    By Staff
    |

    Kamal
    ஏ வெட்னஸ்டே படத்தின் ரீமேக்கில் தான் நடிப்பது உண்மைதான் என்று கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார். வெட்னஸ்டே படத்தில் நஸிருதீன் ஷா நடித்த கேரக்டரில் கமல் நடிக்கப் போகிறார்.

    இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம். அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் படத்தை இயக்கப் போகிறார்.

    இன்று நடந்த எப்.சி.சி.ஐ. மாநாட்டில் கலந்து கொண்டார் கமல். அப்போது திரையுலகம் குறித்தும், திரைப்படங்கள் குறித்தும், மாறி வரும் டிரென்டுகள் குறித்தும் அவர் பேசியதற்கு பலத்த கரவொலிகள் கிடைத்தன.

    இந்த பேச்சின்போதுதான் வெட்னஸ்டே படத்தில் தான் நடிக்கவிருப்பதாக தெரிவித்தார் கமல்.

    கமல்ஹாசன் பேசுகையில், எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். திரையுலகின் குறைகள் குறித்து அப்பாக்களிடமும், அம்மாக்களிடமும் ( அரசு அதிகாரிகள்) ஓடிப் போய் சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை.

    நாம் வளர்ந்து விட்டோம். நமது பிரச்சினைகளை நாமேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

    தமிழ் சினிமாவில் ஒரு வித பய உணர்வு காணப்படுகிறது. அதனால் கார்பரேட் நிறுவனங்களை நுழைய விடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். சினிமா வர்த்தகம் என்று எடுத்துக் கொண்டால் அந்த வர்த்தகத்தைச் செய்ய அனைவரையும் நாம் அனுமதிக்க வேண்டும்.

    சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்கள் நுழைவதை சில சக்திகள் தடுக்கின்றன. எனவேதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து இங்கு பய உணர்வு இருக்கிறது.

    நான் அதி நவீன ரெட் கேமராக்களை வாங்கியுள்ளேன். அவற்றை எனது அடுத்த படத்தில் நான் பயன்படுத்தப் போகிறேன்.

    நாம் என்னதான் படம் எடுத்தாலும் ரசிகர்கள்தான் கடைசியில் அங்கு தீர்ப்பளிக்கப் போகும் மன்னர்கள். எனவே, இயக்குநர் ராஜாவா அல்லது கதை ராஜாவா அல்லது நடிகர் ராஜாவா என்று விவாதிப்பதில் புண்ணியம் இல்லை.

    ரசிகர்கள் அங்கீகரிக்கும் வரை, எந்தப் படத்தையும் சிறிய படம், பெரிய படம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

    நான் ஏற்கனவே மாற்றங்களை ஆரம்பித்து வைத்து விட்டேன். அந்த மாற்றம் தொடர வேண்டும் என விரும்புகிறேன். எனவேதான் தொடர்ந்து மாற்றங்களை நாடிப் போகிறேன் என்றார் கமல்.

    இன்னொரு விஷயத்தையும் கூறினார் கமல். வீடியோ துறையை திரையுலகம் அங்கீகரிக்க வேண்டும். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வீடியோ துறை நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும் என்றார் கமல்.

    பிறகு முக்கியமான இன்னொரு விஷயத்தையும் கமல் கூறினார். அது எப்போதும் கமல் மறக்காமல் சொல்வதுதான் - நான் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன். அரசியல் வியாபாரம் அல்ல. அப்படி மாறினால் அது நாட்டுக்கு அபாயகரமானது என்றார் கமல்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X