twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி 'பேசும்' ரஜினி!

    By Shankar
    |

    கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் தனக்காக டப்பிங் பேசப் போகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

    அது, அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் 'ராணா' படத்துக்காக. இந்தப் படம் தமிழ் - இந்தியில் நேரடியாகவே வெளியாவதால், இந்திப் பதிப்புக்கும் ரஜினியே குரல் தர சம்மதித்துள்ளாராம்.

    பொதுவாகவே தன் படமேயானாலும், அது வேறு மொழிக்கு டப் செய்யப்படும்போது, குரல் தருவதில்லை என்று ஒரு கொள்கை வைத்திருக்கிறார் ரஜினி.

    அவர் நடிப்பில் தமிழில் வெளியான அனைத்துப் படங்களுமே தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் எந்தப் படத்துக்கும் ரஜினி சொந்தக் குரலில் பேசியதில்லை.

    அதேநேரம், அவர் நேரடியாக நடிக்கும் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் மட்டும் சொந்தக் குரல் கொடுப்பார் (கதாநாயகுடு விதிவிலக்கு).

    ரஜினி நடித்து வெளியான கடைசி இந்திப் படம் புலந்தி (நாட்டாமை). இதில் அவர் சிறப்புத் தோற்றத்தில் வந்திருப்பார். அவரது கேரக்டருக்கு அவர்தான் டப்பிங்கும் பேசினார்.

    அதன் பிறகு வேறு இந்திப்படங்களில் நடிக்கவில்லை ரஜினி. சந்திரமுகி, சிவாஜி மற்றும் எந்திரன் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டன. ஆனால் இவற்றில் ரஜினிக்கு வேறு ஒருவரை வைத்தே குரல் கொடுத்தனர்.

    இப்போது ராணா நேரடி இந்தி - தமிழ் படமாக வெளியாகும் நிலையில், அதில் தனது வேடங்களுக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேச ரஜினி முடிவு செய்துள்ளார்.

    ரஜினியின் அதிவேக இந்தி உச்சரிப்புக்கு வடக்கில் தனி ரசிகர் கூட்டமே உண்டு. அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது, ராணா மூலம்!

    English summary
    With his first ever full fledged historical film Rana being made as a Hindi-Tamil bilingual, Rajnikanth will dub for himself in Hindi over using a dubbing artist.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X