»   »  சொந்தப் படம், வித்தியாச வேடம்- விஜய்

சொந்தப் படம், வித்தியாச வேடம்- விஜய்

Subscribe to Oneindia Tamil
Vijay with Asin
வித்தியாசமான தோற்றங்களில் தன்னாலும் அசத்த முடியும் என்பதை நிரூபிக்கும் ஆசை வந்துவிட்டது விஜய்க்கு. விளைவு சொந்தமாகப் படம் தயாரிக்கப் போகிறார்.

தனக்கு வித்தியாசமான வேடங்கள் கிடைக்க வேண்டும் என்பதல்ல முக்கியம், தன்னை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்பதே முக்கியம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து வணிகப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் விஜய்.

எனக்கும் கெட்டப் மாத்தி வித்தியாசமா படம் பண்ணனும்னு ஆசைதான். ஆனா அந்த சோதனையை அடுத்தவங்க காசில செய்து பார்க்க விரும்பல. என் சொந்தப் பணத்தை முதலீடு செய்து, அந்தப் படத்தில் என் மனதுக்குப் பிடித்த வேடங்களைச் செய்து பார்ப்பேன். அந்தப் படம் மக்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கு லாபம். இல்லாவிட்டால் அந்த நஷ்டமும் என்னையே சேரட்டும் என்று ஏற்கெனவே போக்கிரி பிரஸ்மீட்டில் அறிவித்திருந்தார் விஜய்.

அதை நடைமுறைப்படுத்தும் முடிவுக்கும் வந்து விட்டார் இப்போது.

அடுத்த ஆண்டில் தனது சொந்தப் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம் விஜய். இந்தப் படத்தில் தனது கெட்டப்பை முழுவதுமாக மாற்றிக் கொண்டு நடிக்கவிருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் குருவி, பிரபுதேவா இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள புதுப் படம், ஏவி.எம். பாலசுப்பிரமணியத்தின் படம் ஆகியவற்றை முடித்த கையோடு சொந்தப் படம் பற்றி அறிவிக்க உள்ளாராம்.

இதுகுறித்து விஜய்யிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த ஆண்டு குறைந்தது இரண்டு படங்களையாவது தரவேண்டும் என முடிவு செய்துள்ளேன். அடுத்த ஆண்டு ஏவிஎம் படம் முடிந்துவிடும். இதன்பிறகு யாருக்குப் படம் செய்வது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் வித்தியாச வேடத்தில் ஒரு படம் செய்யும் ஆர்வம் இருக்கிறது. அநேகமாக அது அடுத்த ஆண்டு நிறைவேறலாம், எனது சொந்த தயாரிப்பில்... என்றார் விஜய்.

அதே போல கொஞ்ச நாளைக்கு ரீமேக் படங்களும் வேண்டாம் என்று தனது இயக்குநர்களிடம் கூறியுள்ளாராம். குருவி, பிரபு தேவா படம் இரண்டுமே ஒரிஜினல் தமிழ் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரி இயக்கும் ஏவிஎம் படமும் ரீமேக் இல்லையாம்.

தரணி இயக்கத்தில் த்ரிஷாவுடன் இணைந்து விஜய் நடித்துக் கொண்டிருக்கும் குருவி திரைப்படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகிறது.

இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தை யாராவது ரீமேக் செய்தால் அதில் ரஜினி வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆசையை யார் நிறைவேற்றப் போகிறார் என்று பார்ப்போம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil