»   »  'கஜினி'க்காக அமீர் மொட்டை

'கஜினி'க்காக அமீர் மொட்டை

Subscribe to Oneindia Tamil
Amir Khan
கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வரும் அமீர்கான், அப்படத்துக்காக மொட்டை போடவுள்ளார்.

தமிழில் பெரும் வெற்றி பெற்ற கஜினி இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. ஏ.ஆர்.முருகதாஸே இயக்குகிறார். சூர்யா வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்த ஆசினே நடித்து வருகிறார். அமீர்கானே இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இறுதிக் கட்ட படப்பிடிப்பில் மொட்டைத் தலையுடன் அமீர்கான் கலந்து கொள்ளவுள்ளார்.

மொட்டை போடப் போவது குறித்து அமீர்கான் கூறுகையில், கஜினிக்காக நான் மொட்டை போடவுள்ளேன். இது படத்துக்கு அவசியம். பாதிப் படத்தில் நான் மொட்டைத் தலையுடன்தான் வருவேன்.

'தாரே ஜமீன் பர்' படத்திற்குப் பிறகு கடந்த ஒன்றரை மாதங்களாக பல வேலைகளில் நான் பிசியாக இருந்து விட்டதால் கஜினியின் இறுதிக் கட்ட படப்பிடிப்பை தாமதப்படுத்த நேரிட்டது என்று கூறியுள்ளார் அமீர்கான்.

கஜினியை முடித்து விட்டு ராஜு ஹிராணியின் இடியட்ஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அமீர். விது வினோத் சோப்ரா இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

தனது 'தாரே ஜமீன் பர்' படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறும் அமீர், அப்படத்தின் டிவிடி, விசிடி வெர்ஷனை தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இவற்றை டிவிடி, விசிடி வடிவிலும் பார்க்கலாம் என்கிறார் அமீர்.

Please Wait while comments are loading...