»   »  சோனி வசம் தசாவதாரம் ஆடியோ!

சோனி வசம் தசாவதாரம் ஆடியோ!

Subscribe to Oneindia Tamil
Kamala Hasan
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை உலகப் புகழ் பெற்ற சோனி பிஎம்ஜி நிறுவனம் பெற்றுள்ளது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் பிரமாண்டப் படைப்பு தசாவதாரம். உலக நாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் இதில் மிரட்டியுள்ளார். உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் இப்படம் உலகெங்கும் திரையிடப்படுகிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையிடப்படுகிறது.

இதுவரை இந்திய திரையுலகில் இல்லாத சாதனையாக அதிகப்படியான பிரிண்டுகளுடன் தசாவதாரம் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஆசின் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சிஐஏ ஏஜென்டாக மல்லிகா ஷெராவத் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாச தோற்றத்தில் ஜெயப்பிரதா தோன்றுகிறார். ஹிமேஷ் ரேஷ்மையா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு உரிமையை சர்வதேசப் புகழ் பெற்ற சோனி பிஎம்ஜி நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய இசை உலகில், தசாவதாரம் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போவது நிச்சயம்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் இசையை வெளியிடும் உரிமையை சோனி பிஎம்ஜி நிறுவனம் சமீபத்தில்தான் பெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற படத்தின் இசையை வெளியிடுவதில் சோனி நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது.

இந்த திரையுலகில், இசையுலகில், தசாவதாரம் படத்தின் பாடல்களும், அதன் இசையும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, நீண்ட காலத்திற்கு பேசப்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்ைல.

சோனி நிறுவனமும் உலகத் தரம் வாய்ந்தது என்பதால், அடித்தட்டு மக்கள் முதல் அனைத்துத் தரப்பினருக்கும் தசாவதார இசையை சோனி நிறுவனம் கொண்டு சேர்க்கும் என்றார்.

மார்ச் முதல் வாரத்தில் தசாவதாரம் பாடல்கள் வெளியிடப்படவுள்ளது.

உலகளவில் இசைத் துறையில் முதலிடத்தில் இருக்கும் சோனி பிஎம்ஜி நிறுவனம், சர்வதேச அளவில் புகழ் பெற்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களையும், புகழ் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளையும் வாங்கி வெளியிட்டிருக்கிறது.

மணிரத்தினத்தின் குரு, யுடிவியின் ரங் தே பசந்த், கபி அல்விதா நா கெஹெனா, கபி குஷி கபி கம், குச் குச் ஹோத்தா ஹைன், கல் கஹானா, அமீர்கானின் லகான், ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆகியவற்றை சோனி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil