For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  2013: தலைவா.. வாழ்நாளில் விஜய் மறக்க விரும்பும் படம்!

  By Shankar
  |

  இந்த ஆண்டு கமலுக்கும் சூர்யாவுக்கும் அஜீத்துக்கும்.. ஏன் அடுத்த நிலை ஹீரோக்களான விஜய் சேதுபதி - சிவ கார்த்திகேயனுக்கு நல்ல ஆண்டாக அமைந்தது.

  ஆனால் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் - குறிப்பாக ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்டவர் என்று சொல்லப்படும் விஜய் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டு மிகக் கடுமையாக அமைந்துவிட்டது.

  முதலில் விஜய்க்கு நேர்ந்ததைப் பார்ப்போம்...

  விஜய்...

  விஜய்...

  ரசிகர்களின் எண்ணிக்கை, படங்களின் வசூல், கிராமப்புற ரசிகர்களிடம் செல்வாக்கு என பல விஷயங்களில் ரஜினி, கமல் என்ற வரிசைக்குப் பிறகு முதலிடத்தில் இருப்பவர் விஜய். ஆனால் அவருக்குத்தான் இந்த ஆண்டு பெரும் சோதனையாக மாறிவிட்டது. அவரது எல்லா செயல்பாடுகளும் அரசியலாகி, அவரை சிக்கலுக்குள்ளாக்கின. இத்தனைக்கும் ஆளும் அதிமுகவுக்கு வேண்டப்பட்டவராக, முதல்வர் ஜெயலலிதா ஆசி பெற்றவராக, அவரது வெற்றிக்கு அணில் மாதிரி உழைத்தவராக தன்னைச் சித்தரித்திருந்தார்.

  தலைவா பிரச்சினை

  தலைவா பிரச்சினை

  விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் அறிவிக்கப்பட்டபோதே, அதன் தலைப்புக்கு எதிர்ப்பு வந்தது. தலைப்பை மாற்றலாமா என விஜய் கேட்டபோது, விஜய்யின் அடிப்பொடிகள் 'இருக்கட்டும் சார்... எப்படியும் நீங்க ஆகப் போறவர்தானே', என்று ஏற்றிவிட, அவரும் ஒரு இச்சையில் விட்டுவிட்டார்.

  டைம் டு லீட்

  டைம் டு லீட்

  இது போதாதென்று, டைம் டு லீட் (தலைமை ஏற்க இதுவே தருணம்) என்று அடிக்குறிப்பு ஒன்றும் தலைப்பில் இடம்பெற்றது. தலைவா தலைமை ஏற்க வா என்று எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்த நேரத்தில் இடம்பெற்ற கோஷத்துக்கு நிகரானது இது என்று வேறு சிலர் கிளப்பிவிட்டனர்.

  பிறந்த நாளில் ஆரம்பித்த சோதனை

  பிறந்த நாளில் ஆரம்பித்த சோதனை

  படம் எந்த சிக்கலும் இல்லாமல் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வளர்ந்தது. ரீலிஸ் நேரம் நெருங்கும்போதுதான், விஜய் பிறந்த நாள் வந்தது. அதனை ஒரு ரசிகர் மன்ற மாநாடு ரேஞ்சுக்கு நடத்திட விஜய்யின் மக்கள் இயக்கம் பெரிய ஏற்பாடுகளைச் செய்தது. விழா நடப்பதற்கு இரு நாள்கள் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் 24 மணி நேரம் இருந்தபோது, காவல் துறை அனுமதி மறுத்தது. விழா ரத்து என அறிவிக்கப்பட்டு, போடப்பட்ட பந்தல்கள் பிரிக்கப்பட்டன. விஜய் அமைதியாக இருந்துவிட்டார்.

  நோ ரிலீஸ்...

  நோ ரிலீஸ்...

  அடுத்து படம் வெளியாகும் தேதி நெருங்கியது. விளம்பரங்களெல்லாம் ஜோராக வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பாதுகாப்பு, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விஜய்யின் படத்துக்கு தியேட்டர் தர முடியாது என்று அறிவித்தன திரையரங்குகள். படத்தில் ஏராளமான காட்சிகள் ஆட்சேபத்துக்குரியதாக உள்ளது என படம் பார்த்த தமிழக அரசின் வரிவிலக்கு பரிந்துரைக் குழு வேறு அறிவித்துவிட்டது. எனவே தியேட்டரே தரமுடியாது என கூறிவிட்டார்கள்.

  காரணமே சொல்லவில்லை...

  காரணமே சொல்லவில்லை...

  அறிவித்த தேதியில் உலகம் முழுவதும் தலைவா ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியானது, தமிழகம் தவிர. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கூட இந்தப் படம் சொன்ன தேதியில் வெளியானது. விஜய் உருக்கமாக முதல்வருக்கு வேண்டுகோள் எல்லாம் விட்டுப் பார்த்தார். ஆனால் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒருவழியாக சில தினங்கள் கழித்து தலைவா வெளியானது. என்ன பிரச்சினை என்று இன்றுவரை விஜய் சொல்லவே இல்லை.

  ஆனால்...

  ஆனால்...

  இஅந்தப் பிரச்சினையில் விஜய்யின் இமேஜ் அதல பாதாளத்துக்கு சரிந்து போனது. தன் படம் ஏன் வெளிவராமல் நிற்கிறது, தன் பிரச்சினை என்ன என்பதைக் கூட சொல்லத் தயங்கும் அல்லது பயப்படும் ஒருவராகவே அவரைப் பார்க்க முடிந்தது. அரசியல் ஆர்வமுள்ள, தமிழகத்தை ஆளத் தன்னை தயார்ப்படுத்திக் கொள்பவராகக் காட்டிக் கொண்ட விஜய்யின் வீரமும் தைரியமும் இதுதானா என்ற கேள்வியைக் கேட்காத விஜய் ரசிகனை விரல்விட்டு எண்ணிவிடலாம்!

  மீண்டு வருவாரா?

  மீண்டு வருவாரா?

  ஒரு பக்கம் இமேஜ் சரிவு, மறுபக்கம் படமும் படுதோல்வி. அந்தப் படத்துக்கு முன் விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிய நண்பன், துப்பாக்கி படங்களின் வெற்றிகள் உடனடியாக மறக்கப்பட்டு, இந்த தலைவா பிரச்சினையும் தோல்வியுமே துருத்திக் கொண்டு நிற்கின்றன இன்னமும். விஜய் இதிலிருந்து மீள்வாரா, பிரச்சினையின்றி ஜில்லா வெளிவருமா என்ற கேள்விகள் ஆரம்பத்தில் எழுந்தன. இப்போது மெல்ல மெல்ல அந்த கேள்விகள் வலுவிழந்து வருகின்றன. காரணம், படத்தின் தயாரிப்பாளர்.

  சிக்கலில்லாமல்...

  சிக்கலில்லாமல்...

  வெகு அழகாக இந்தப் படத்தை ஒரு மல்டி ஸ்டாரராக மாற்றியதுடன், சிக்கலில்லாமல் படத்தை வெளியிடும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறார். இது நாம் அடக்கி வாசிக்க வேண்டிய நேரம் எனப் புரிந்து விஜய்யும், நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி, ஆடம்பரமில்லாமல் ஆடியோ ரிலீஸ் என மாறியுள்ளார்.

  மறக்க விரும்பும் படம்...

  மறக்க விரும்பும் படம்...

  விஜய் தனது 21 ஆண்டு திரை வாழ்க்கையில் மறக்க விரும்பும் படம் என்று கேட்டால், நிச்சயம் தலைவாவைத்தான் சொல்வார்.

  English summary
  2013 is the worst year for actor Vijay due to Thalaivaa issue.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X