»   »  பிளாஷ்பேக் 2015: 4 படங்கள்.. 2 ஹிட்.. ரவிக்குக் கிடைத்த "ஜெயம்"

பிளாஷ்பேக் 2015: 4 படங்கள்.. 2 ஹிட்.. ரவிக்குக் கிடைத்த "ஜெயம்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடத்தில் தொடர்ச்சியாக 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அதில் 2 படங்கள் ஹிட்டடித்ததால் 2015 ன் வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.

இந்த வருடத்தில் வெளியான 90% படங்கள் தோல்வி கண்டதால் தமிழ்த் திரையுலகினருக்கு இது சோதனையான ஆண்டாக மாறிவிட்டது.


எனினும் நாயகன் ஜெயம் ரவிக்கு இந்த வருடம் ராசியான வருடமாகவே அமைந்திருக்கிறது. அவரின் நடிப்பில் வெளியான 3 படங்களில் தனி ஒருவன் இந்த வருடத்தின் மாபெரும் பிளாக்பஸ்டர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானதால் ஜெயம் ரவி என்ற பெயரே இவரின் அடையாளமாகிவிட்டது. தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.


தோல்விப் படங்கள்

தோல்விப் படங்கள்

தாஸ், மழை, இதயத் திருடன், தீபாவளி, தில்லாலங்கடி, ஆதி பகவான் என்று ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தோல்விப் படங்கள் வெற்றி படங்களை விட அதிகமாக மாறியது. ஒரு கட்டத்தில் தோல்விப் படங்களில் இருந்து மீண்டுவர ஜெயம் ரவியால் முடியவில்லை.


நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில்

அதிலும் கடந்த 2014 ம் ஆண்டில் நிமிர்ந்து நில் படம் தவிர வேறு எதுவும் இவரின் நடிப்பில் வெளியாகவில்லை. அண்ணன் இயக்குநர், அப்பா எடிட்டர் என்று சினிமா உலகில் பின்னணி இருந்தும் ஜெயம் ரவியால் ஜொலிக்க முடியவில்லை.


ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட்

இந்த 2015 ம் ஆண்டில் பலத்த போரட்டங்களுக்குப் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் ரோமியோ ஜூலியட் திரைப்படம் வெளியானது. ஹன்சிகாவுடன் ஜெயம் ரவி இணைந்து நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலைப் பெற்றது. மேலும் தோல்விகளால் துவண்டிருந்த ஜெயம் ரவிக்கு இப்படம் ஒரு புதிய உற்சாகத்தையும் அளித்தது.


தனி ஒருவன்

தனி ஒருவன்

இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று தனி ஒருவனைக் கூறலாம். அந்தளவிற்கு வசூல்+ வரவேற்பு இரண்டையும் ஒருசேரக் குவித்தது இப்படம். தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் மித்ரன் ஐ.பி.எஸ் ஆக ஜெயம் ரவி நடித்திருந்த இப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி 100 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது.


வெற்றி நாயகன்

வெற்றி நாயகன்

ரோமியோ ஜூலியட் மற்றும் தனி ஒருவன் படத்தின் மூலம் 2015 ம் ஆண்டின் வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி. மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் வசூலில் சோடை போக தனி ஒருவன் மூலம் வெற்றி நாயகன் அந்தஸ்து ஜெயம் ரவிக்கு கிட்டியது.


இதுவரை 3 படங்கள்

இதுவரை 3 படங்கள்

இந்த வருடத்தில் ரோமியோ ஜூலியட், சகலகலாவல்லவன் மற்றும் தனி ஒருவன் என்று மொத்தம் 3 படங்கள் இவரின் நடிப்பில் வெளியாகி இருக்கின்றன. இதில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் கூட சகலகலாவல்லவன் பாக்ஸ் ஆபிசில் எடுபடவில்லை.


பூலோகம்

பூலோகம்

அடுத்தடுத்து இவரின் படங்கள் வெற்றி பெற்றதால் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த பூலோகம் திரைப்படத்தையும் அதன் தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட முடிவு செய்திருக்கின்றனர்.பூலோகம் வருகின்ற 24 ம் தேதி வெளியாகிறது. இதன் மூலம் இந்த வருடத்தில் அதிகபட்ச படங்கள் வெளியான ஒரே நடிகர் என்று பெயர் வாங்கியிருக்கிறார் ஜெயம் ரவி.


மிருதன்

மிருதன்

மிருதன் திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்ததாக கவுதம் வாசுதேவ மேனன் மற்றும் சுசீந்திரன் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருக்கிறார்.


மொத்தத்தில் இந்த 2015 ம் வருடத்தின் வசூல் + வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.English summary
In 2015 Romeo juliet and Thani Oruvan Back to Back Hits, Now Jayam Ravi Turned a Most Successful Hero in Kollywood Industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil