For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  புலிவேஷம்: ஆர்கேயுடன் இணைகிறார் கார்த்திக்!

  By Staff
  |

  Karthik
  நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார் கார்த்திக்.

  இப்போது முன்பைப் போல அல்லாமல் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து இயக்குநர்களை ஆனந்தக் கண்ணீர் விட வைக்கிறாராம்.

  மாஞ்சா வேலு படத்தில் நடித்து முடித்த கையோடு, இப்போது ஆர் கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தில் ஒரு அசத்தல் ரோலில் வருகிறார். இயக்குபவர் பி வாசு.

  ஷூட்டிங் 8 மணி என்றால், 7.45-க்கே களத்தில் ஆஜராகி யூனிட்டையே வியப்பில் ஆழ்த்துகிறாராம்.

  அக்னி நட்சத்திரம் போன்று விறைப்பான, முறைப்பான இந்தப் பாத்திரம் அவரை மீண்டும் உச்சத்துக்கு கொண்டுவந்து நிறுத்தும் என்கிறார் இயக்குநர் பி வாசு.

  இந்தப் படத்துக்காக 20 கிலோ எடை குறைந்துள்ளார் ஆர்கே.

  அவரிடம் ஒரு நாள், 'இப்படியிருந்தா கிராமத்து கேரக்டருக்கு சரியா வராதே.. நல்லா மெலியனுமே' என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

  அதன் பிறகு படத்தின் டிஸ்கஷன் நடக்கிற இடத்தின் பக்கமே போகவில்லை ஆர்கே. வாசுவே கூப்பிட்டும் இரண்டு மாத காலம் எங்கும் போகாத ஆர்கே, ஒருநாள் திடீரென்று இறுக்கமான பனியன் ஒன்றை அணிந்தபடி வாசுவின் முன்னாள் போய் நிற்க, ஆச்சரியப்பட்டுவிட்டார் இயக்குநர்.

  கிட்டத்தட்ட தனது எடையில் 20 கிலோ குறைத்து ஒரு முழு கிராமத்தானாகவே மாறியிருக்கிறார் ஆர்கே.

  கலகல காமெடிக்கு கஞ்சா கருப்பு. புலிவேஷம் படத்துக்காக தனது தேனிலவையே தள்ளிவைத்திருக்கிறாராம் கஞ்சா கருப்பு. திருமணமான கையோடு பரீட்சை எழுதப் போய்விட்டார் அவர் மனைவி. வரட்டுமே என்று காத்திருந்தவருக்கு கையோடு காத்திருந்தது முழுநீள காமெடியன் வேடம் புலிவேஷத்தில். மனைவி பரீட்சை முடிந்த வர, இவர் புலிவேஷத்துக்காக பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார்.

  இன்று வரை படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது.

  சீக்கிரம் முடிச்சு என்ன தேனிலவுக்கு அனுப்பி வையுங்கப்பா என புலம்பிக்கொண்டிருக்கிறார் கஞ்சா, எதிரில் தென்படுவோரிடமெல்லாம்.

  கஞ்சாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்கப் போகிறவர் லொள்ளு சபா ஜீவா.

  மன்சூரலிகானுக்கும் இளவரசுக்கும் வெயிட்டான கேரக்டர்கள் இந்தப் படத்தில்.

  இந்தப் படம் குறித்து இயக்குநர் வாசு கூறுகையில், "எல்லா காலகட்டத்திலும் பெரிய ஹீரோக்களோடு இணைந்து படம் பண்ணிவிட்டதால், அடுத்த கட்ட ஹீரோக்களை மிஸ் பண்ணியே வந்திருக்கிறேன். அடுத்த கட்ட ஹீரோக்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்ட இருந்தது. அதை ஆர்கேயுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன். புலிவேஷத்துக்கு காரணம் சொல்ல வேண்டுமென்றால்... எல்லா மனிதனுக்குள்ளும் கோபம் ஒரு புலி வேஷம் போட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது.

  அது எதனால் எப்படி வெளிப்படுகிறது, என்ன விளைவு என்பதை புலிவேஷம் தெள்ளத் தெளிவாக உங்களுக்கு விளக்கம். படம் முழுக்க அடிநாதம் போல் ஒரு சென்டிமெண்ட் ஓடிக் கொண்டே இருக்கும்.

  புலிவேஷம் ஒரு அழகான படம். எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும்" என்றார் வாசு.

  ஆர்கே கூறுகையில், "எல்லாம் அவன் செயல், அழகர் மலை வெற்றிப் படங்களுக்குப் பிறகு, மிகக் கவனமாக அடுத்த படம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, வெற்றி இயக்குநரான பி வாசு சாரின் புலிவேஷம் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்ன உடன் உடம்பை மட்டும் குறைக்கவில்லை... நிஜமாகவே பலத்த காயங்களும் பட்டுள்ளேன் படப்பிடிப்பின்போது. என்னை மரத்தில் தொங்கவிட்டு வேறு சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.

  நல்ல திரைக்கதை, அழகான பாடல்கள் என நல்ல பொழுதுபோக்குப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களுடனும் தயாராகிறது புலிவேஷம்" என்றார்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X