»   »  திரையுலகில் 23 வருடங்களை வெற்றிகரமாகக் கடந்தார் நடிகர் ஷாரூக்கான்

திரையுலகில் 23 வருடங்களை வெற்றிகரமாகக் கடந்தார் நடிகர் ஷாரூக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: #23golden years of SRK என்ற ஹெஷ்டேக் இன்று காலையில் இருந்தே இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. நடிகர் ஷாரூக் கான் நடிக்க வந்து இன்றோடு 23 ஆண்டுகள் முடிந்ததைக் கொண்டாடும் விதமாக இந்த ஹெஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

நடிகர் ஷாரூக்கான்(49) திரைத்துறையில் காலடி பதித்து இன்றுடன் 23 வருடங்கள் முடிவடைந்து விட்டது. நடிகர் , தயாரிப்பாளர், தொகுப்பாளர் என்று பன்முகத் திறமைகள் கொண்டவர் ஷாரூக்கான்.

1992 ம் ஆண்டில் சிறந்த தீவானா என்ற இந்திப் படத்தின் மூலம் நடிகராக இந்தித் திரையுலகில் அறிமுகமான ஷாரூக்கானுக்கு, அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை பிலிம்பேர் கொடுத்து கவுரவித்தது.

இதுவரை சுமார் 80க்கும் அதிகமான இந்தித் திரைப்படங்களில் நடித்து இருக்கும் நடிகர் ஷாரூக்கின் சிறப்புகள் சிலவற்றை இங்கு காணலாம்.

ஷாரூக் கான்

ஷாரூக் கான்

1992 ம் ஆண்டில் இந்தித் திரைப்படமான தீவானா என்ற படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஷாரூக் கான். 23 வருடங்களில் சுமார் 80க்கும் அதிகமான பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானி (2000)அசோகா (2001)சல்தே சல்தே (2003)மே ஹூன் நா (2004)கால்l (2005)பஹேலி (2005)ஓம் சாந்தி ஓம் (2007)ரப்னே பனாதி ஜோடி (2008)ரா ஒன் (2012)சென்னை எக்ஸ்பிரஸ் (2013) போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களை சொந்தமாகத் தயாரித்து இருக்கிறார்.

தமிழ் படங்களில்

தமிழ் படங்களில்

ஹேராம்,சாம்ராட் அசோகா, தேசம் மற்றும் உயிரே போன்றத் தமிழ்ப் படங்களில் நடித்து இருக்கிறார்.

ராகுல்

ராகுல்

ஷாரூக் கான் நடித்த படங்களில் அதிகமான கதாபாத்திரங்களின் பெயர் ராகுல், என்றே இருக்கும். அந்தப் பெயரின் மேல் அப்படி என்ன மோகமோ சாருக்கு..தெரியவில்லை.

கிரிக்கெட்

கிரிக்கெட்

கிரிக்கெட் மீது கொண்ட அதிக ஈடுபாடு காரணமாக தனது நண்பர்களுடன் இணைந்து ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கியவர். ஒவ்வொரு முறை கொல்கத்தா அணியினர் விளையாடும் போதும் மைதானத்தில் அமர்ந்து வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். ஐபிஎல் போட்டிகளில் இரண்டுமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளது கொல்கத்தா அணி.

சமூக ஊடகங்களின் ராஜா

சமூக ஊடகங்களின் ராஜா

பாலிவுட் லைப் என்ற இணையதளம் சமூக ஊடகங்களில் உங்களுக்குப் பிடித்த இந்தி நடிகர் யார் என்று நடத்திய கருத்துக் கணிப்பில் சல்மான் மற்றும் அமீர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி சமூக ஊடகங்களின் ராஜா என்ற பட்டத்தை சூடிக் கொண்டார் ஷாரூக் கான்.

இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஷாரூக்

இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஷாரூக்

நடிக்க வந்து 23 வருடங்கள் முடிவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #23golden years of SRK என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் இந்திய அளவில் ஷாரூக்கானை டிரெண்டடிக்க வைத்து விட்டனர்.

காதல் மன்னன்

காதல் மன்னன்

காதல் காட்சிகளில் உருகி வழிந்து நடித்திருப்பார், இன்றும் இவர் நடித்த குச் குச் ஹோதா ஹை, டில் தோ பாஹல் ஹை , தில்வாலே துல்கனியா லீ ஜெயங்கே போன்ற படங்களின் காதல் காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று விளங்குகின்றன.

1000 வாரங்களைக் கடந்த படம்

1000 வாரங்களைக் கடந்த படம்

தில்வாலே துல்கனியா லீ ஜெயங்கே ஷாரூக் - கஜோல் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் 1௦௦௦ வாரங்களைக் கடந்து ஓடி சாதனை புரிந்தது.

வசூல் மன்னன்

பாலிவுட்டின் வசூல் மன்னன்களில் ஒருவராகத் திகழ்பவர் ஷாரூக்கான். இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் 100 கோடியை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Shah Rukh Khan completes 23 years in the industry Today( 25 June) and it's celebration time for the fans. #23GoldenYearsOfSRK has been one of the top trending topics on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil