twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நண்பர்களை சம்பாதிப்பதே பெரிது-ரஜினி

    By Staff
    |

    Rajini with Kamal
    வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் எல்லாம் சுலபமாய் சம்பாதித்து விடலாம். ஆனால் நல்ல நண்பர்களைச் சம்பாதிப்பதே மிகப் பெரிய விஷயம். இவ்வளவு வேலைகளுக்கிடையில் வைரமுத்து நல்ல நண்பர்கள் ஏராளமானோரை சம்பாதித்திருக்கிறார். அது பெரிய சாதனை, என்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

    வைரமுத்து மகன் மதன் கார்க்கி-நந்தினி திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி ரஜினிகாந்த் பேசியதாவது:

    கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடே வராது என்று யாரேனும் கூறினால் அதை நம்பாதீர்கள். நிச்சயம் எல்லா தம்பதிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரும். திருமதி ரஜினிகாந்த் உள்பட!.

    கருத்து வேறுபாடுகளே இல்லை என்று சொல்பவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொண்டு ஊரையும் ஏமாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.

    இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. விட்டுக் கொடுத்து அனுசரித்துப்போக வேண்டும். விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் வாழ்க்கை கசந்து போகாமல் இருக்கும். இதை என் அனுபத்திலிருந்தே மணமக்களுக்குச் சொல்கிறேன்.

    பணம், பெயர், புகழைவிட நண்பர்களை சம்பாதிப்பது மிகப் பெரிய விஷயம். இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் கவிஞர் வைரமுத்து நண்பர்களை சம்பாதித்து இருப்பதை கண்டு பெருமிதம் கொள்கிறேன், ரஜினி.

    பொள்ளாச்சி மகாலிங்கம் வாழ்த்து:

    திருமணத்தில் பிரபல தொழிலதிபரும், ஆன்மிக-இலக்கியப் புரவலருமான அருட்செல்வர் பொள்ளாச்சி டாக்டர் நா.மகாலிங்கமும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வாலி, நடிகர் விஜயகாந்த் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர்.

    இந்த திருமணத்தின்போது கவிஞர் வைரமுத்து எழுதிய 'பாற்கடல்' என்ற கவிதை நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதன் முதல் பிரதியை மணமகள் நந்தினி பெற்றுக் கொண்டார்.

    திருமண விழாவில் முக்கிய அரசியல் பிரமுகர்களும், திரைப்படத் துறையினரும் திரளாகக் கலந்து கொண்டனர். மண விழாவில் கலந்து கொண்ட வர்களுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X