இந்தி சிவாஜி ரெடி!

By Staff

Rajinikanth
தென்னகத்தை கடந்த ஆண்டு கலக்கிய ரஜினியின் சிவாஜி, வடக்கையும் கலக்க ரெடியாகி விட்டது. சிவாஜி படத்தின் இந்தி பதிப்புக்கான டப்பிங் வேலைகள் முடிந்து விட்டதாம்.

ரஜினிகாந்த் நடிக்க, ஏவி.எம். தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி, வசூல் சாதனை படைத்த சிவாஜி தற்போது இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கில் படம் ரிலீஸானபோதே, வட இந்தியாவிலும் இப்படம் தமிழில் திரையிடப்பட்டது. மொழி புரியாவிட்டாலும் கூட ஏராளமான வட இந்தியர்கள் படத்தைப் பார்த்து ரசித்தனர். மும்பையில் இரு தியேட்டர்களிலும், டெல்லியில் ஒரு தியேட்டரிலும் இப்படம் 100 நாட்களைத் தொட்டதாக ஏவி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தி ரசிகர்களுக்கேற்ற வகையில் சில காட்சிகளை ரீஷூட் செய்துள்ளனர். நகாசு வேலைகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து படம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.

தற்போது படத்ைத பெரிய அளவில் வெளியிடுவதற்காக மும்பை மற்றும் பிற பகுதி விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாம் ஏவி.எம். நிறுவனம்.

மொத்தம் 350 பிரிண்டுகள் இந்தி சிவாஜிக்காக போடப்பட்டுள்ளதாம். நாடு முழுவதும் இந்தி சிவாஜி வெளியிடப்படவுள்ளது. ஜோதா அக்பர் படத்தைத் தயாரித்த யுடிவி உள்ளிட்ட சில பெரிய நிறுவனங்கள் படத்தை விநியோகிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

வட இந்திய ரசிகர்களுக்கு சிறந்த கோடை விருந்தாக சிவாஜி அமையும் என ஏவி.எம் நிறுவனம் நம்புகிறது. விரைவில் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

கூல்ஜி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X