»   »  எடிஎம்-வெற்றிப் படம் என்கிறார் விஜய்

எடிஎம்-வெற்றிப் படம் என்கிறார் விஜய்

Subscribe to Oneindia Tamil
Vijay with Shreya
அழகிய தமிழ்மகன் வெற்றிப்படம் தான். அந்த படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை என அப்படத்தின் ஹீரோ விஜய் பெரிய விளக்கம் கொடுத்துள்ளார்.

சுவாகசித்ரா அப்பச்சன் தயாரிப்பில், பரதன் இயக்கத்தில் விஜய்-ஸ்ரேயா நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான அழகிய தமிழ்மகன் படம் எதிர்பார்த்த அளவில் பெரும் வெற்றி பெறவில்லை. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால் இது குறித்து நடிகர் விஜய்யோ அல்லது படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். இந் நிலையில் விஜய் செய்தியாளரிடம் கூறுகையில்,

என்னுடைய சமீபத்திய தீபாவளி ரிலீஸ் படமான அழகிய தமிழ்மகன் தோல்விப் படம் என்று சிலர் எழுதி வருவது குறித்து நான் கவலைப்படவில்லை. என் படம் வெற்றி பெற்றதா, அதில் லாபம் கிடைத்ததா என்று அதன் விநியோகஸ்தர்கள்தான் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். இந்தப் படம் பெரிய அளவு லாபத்தைக் குவிக்காமல் இருக்கலாம். ஆனால் இதுவரை நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. தமிழ்நாடு முழுவதும் பிரமிட் நிறுவனம்தான் வெளியிட்டது. அவர்களையே கேட்டுப் பாருங்கள். விரைவில் இதுகுறித்து நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுவேன்.

தற்போது நான் நடித்து வரும் குருவி என் திரையுலக கேரியரில் மிக முக்கியமான படமாகும். கில்லியை விட பல விதத்திலும் மேம்பட்ட ஒரு படைப்பாக இது அமையும். அந்தளவுக்கு பரபரவென போகிறது இந்தப் படம்.

குருவி படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளிவருகிறது. இந்தப் படம் முடிந்ததும் நானும், பிரபுதேவாவும் அய்ங்கரன் நிறுவனத்துக்காக இணைகிறோம் என்றார் விஜய்.

அழகிய தமிழ்மகன் வெற்றிப்படமா என பிரமிட் நிறுவனத்தாரிடம் கேட்டதற்கு, அழகிய தமிழ்மகனால் எங்களுக்கு லாபம்தான், நஷ்டமில்லை என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டனர்.

நாங்களும் நம்புகிறோம்!?!?!?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil